தங்கத் தமிழ்நாடு

Posted by G J Thamilselvi On Friday, 28 October 2016 0 comments
சி. ஜெயபாரதன்

Inline image 1

தங்கத் தமிழ்நாடு

சிஜெயபாரதன் இராம. மேகலாதங்கத் தமிழ்நாடு!  எங்கள் தாய்நாடு!  
சங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடு!
சிங்கத் தமிழர் உதித்த செந்நாடு!
மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு!   
எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட
முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!

வங்கக் கடலெழு செங்கதிர் ஒளியூட்ட 
தென்குமரி முனைதிகழ் வள்ளுவர் வழிகாட்ட
ஆத்திசூடி ஓளவைசூடிக்கொடுத்த ஆண்டாள்,  
வான்புகழ் வள்ளுவர்தேன்கவி இளங்கோ,
கவிச்செல்வர் கம்பர்கவிக்கோ சேக்கிழார்
புதுமைக்கவி பாரதிபுரட்சிக்கவி பாரதிதாசன்,
யாவரும் உனது  மாதவ  மக்கள்!
யாதும் நாடே யாவரும் கேளிர்!
தீதிலா துனையாம் பாதுகாத் திடுவோம்!
காசினி மீதில் நேசமாய்த் திகழும்
மாசிலா நாடேமைந்தர்​கள்​  ஒன்றாய் 
வாழ்த்துவம் உனையேஉயர்த்துவம் உனையே
பாரதத் தாயின் தவத்திரு நாடே!
பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்தி​டின்
பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!

0 comments:

Post a Comment