அவள் - 1

Posted by G J Thamilselvi On Tuesday, 16 August 2016 3 comments
உணவை உண்ணாமல் சோற்றுப் பருக்கையில் கோலம்போட்டுக்கொண்டிருந்தாள் அவள். என்ன ஆச்சு திங்கறதுக்கும் வெத்திலைப்பாக்கு வச்சு ஆரத்தி எடுக்கனுமோ? என்று நக்கலடித்த மேகேந்திரனுக்கு ஒரு பதிலும் அளிக்கவில்லை.

மேடம் மூட் அவுட் போல என்று எழுந்துவிட்டான் அவள். மேகேந்திரன் சக பணியாளன். சாப்பாட்டை பகிர்ந்துகொள்வான். பல நேரங்களில் குடும்ப சோகங்களை, எங்கம்மாவுக்கு சோறே போட மாட்டேங்குறா மேடம், மத்தலத்துக்கு ரெண்டு பக்கமும் இடி. எனக்கு அதுக்கும் மேல போய் மூணுபக்க இடி. பாருங்க வீட்ல இந்த பக்கம் பொண்டாட்டி, அந்த பக்கம் அம்மா. இங்க வந்தா தாசில்தார்.

எப்பவாவது ஆபிஸ் ரெண்டாவது பொண்டாட்டி மேடம் என்று சலித்துக்கொள்வான். அதுபோல் தான் ஆகிவிட்டது இன்று சம்யுக்தாவின் நிலையும்.

காலையிலேயே அம்மா பொரும துவங்கிவிட்டாள் எந்த நாயாச்சும், என்னை சாப்டுச்சான்னு கேட்டுச்சா?

நாய்!

இந்த வார்த்தை உறுத்தியது, இந்த வார்த்தையை அவன் தான் பயன்படுத்துவான். ராகவன். அவளை நேசிக்கும் அன்பானவன் என்று எண்ணியிருந்தவன். அடுத்து சில நாட்கள் தொடர்ந்து நடந்த அத்தனையும் ராகவனின் சித்துவிளையாடல்கள் போலவே தோன்றியது.

சம்யுக்தா அவனிடம் கேட்டாள். அம்மாவுக்கு ஏதும் சொல்லித்தரீங்களா? நான் ஏன்பா சொல்லித்தரபோறேன். உங்கம்மாவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.

அம்மாவிடமும் கேட்டாள். ராகவன் ஏதும் போன் பேசினாரா? சத்யமா பைளில் தொட்டு நான் ராகவன்ட்ட பேசவே இல்லை என்றாள்.

இதற்கு என்னதான் முடிவு?

சம்யுக்தா யாரையும் சாப்டீங்களா? என்று வினவுவதையே நிறுத்திவிட்டாள். அவளின் அன்பும் கரிசனையும் விளையாட்டாகவோ குதர்க்கமாகவோ எடுத்து ஆளப்பட்ட பிறகு, உணர்வு காயப்பட்ட பிறகு விசாரிப்பு என்பது அர்த்தமற்றதாய் இருந்தது. என்ன தான் ஒவ்வொரு காலையும் புதியதாக பிறந்தாலூம்,  சிந்தனைகளை  மாற்றிக்கொள்ளும் பயிற்சி என்பது அனுபவத்தில் வருவதே அன்றி வேறில்லை.

3 comments:

 1. அருமாயான பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 2. பேசும் சொற்களில் கவனம் தேவை என்பதை உணர்த்திய பதிவு! அருமை!

  ReplyDelete
 3. அனைவருக்கும் வணக்கம்

  புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  ReplyDelete