பேதை மனம் குழம்பாதோ?

Posted by G J Thamilselvi On Monday, 27 June 2016 1 comments

இருள் சூழ் மனப் புயலில்
சிக்கி நான் தவிக்கையிலே
கரம் பற்றி தூக்கிவிட
எப்போழுது நீ வருவாய்


சுற்றிலும் பெண் கூட்டம்
புயல் சூழ் காற்றாட்டம்
அத்தனையர் நேசிப்பில்
உன் நினைவில் எவர் இருப்பார்?

ஒரு பக்கம் நீ நின்று
மறுபக்கம் சாடயிலே
மறுபக்க பொதுவாக
எப்படி நீ நிற்பாய்

நேசிப்பதாய் சொல்லிவிட்டு
எதிர் புறம் சார்ந்துக்கொண்டால்
உன் நேசிப்பு எங்கு என்று

பேதை மனம் குழம்பாதோ?

1 comment:

  1. சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete