உயிர் கூடு...!

Posted by G J Thamilselvi On Friday, 24 June 2016 1 comments

ஆச்சர்யங்களை 
அடைக்காக்கிறேன்
தனிமை போக்குபவன் நீ


எண்ணங்களின் மையத்தில்
இல்லை நீ
எனக்குள் இருப்பதை 
உணர்ந்து உயிர்க்கிறேன்

உடமையாக்கிக்கொள்ள 
ஒருபோதும் ஆசையில்லை
உயிராகத் தொடரவே ஆசிக்கிறேன்

கொஞ்சம் வலி தந்த போதும்
கொஞ்சி வடிவமைப்பதை 
பாறைக்குள் சிற்பமாய் ஏற்கிறேன்

ஆனாலும்! ஆனாலும்! ஆனாலும்!
மகிழ்வும், துக்கமும் துறந்து
நடுவில் நிற்கவே எத்தனிக்கிறது
உயிர் கூடு.

1 comment: