வெண்ணிலவன்!

Posted by G J Thamilselvi On Friday, 6 May 2016 0 comments

தூங்கா இரவொன்றைக் கொடுத்தான்
அது மனம் விட்டு நீங்கா இரவானது
விண்ணை நிறைத்த வெண்ணிலவன்
சித்திரைத் திங்களில் வந்துதித்தான்


விண்ணைத் துறந்தவன் என்னருகே
பிள்ளை எனவே துயில் புரிந்தான்
இரட்டையர் போலே என் தோளில்
இருபக்கம் உறங்கும் மதிக் கண்டேன்

ஒரு பக்கம் மகளென மறுபக்கம் அவனென
இருபக்கத் துணைகளில் இரு நிலை பிறையென
இதயத்தில் குடிக்கொண்ட முழுமதி நிலவென
எனக்குள்ளே உயிர்த்திட்ட நிலைக் கண்டேன்.

0 comments:

Post a Comment