ஆணையிட ஏன் துணிந்தாய்!

Posted by G J Thamilselvi On Tuesday, 1 September 2015 0 comments

நிலவனே நின் வரவில்
நிறை மதியாய் மலர்ந்தேன் நான்

வருகையின் காரணத்தை
மெதுவாக கூறிச் சென்றாய்

உலகத்தை மாற்றிடவே
மானுட பிறவி என்று

காதலை துறந்துவிட்டேன்
காதலியே கடந்து செல் என்றாய்!

காதலைத் துறந்தவனே
ஆணையிட  ஏன் துணிந்தாய்?

0 comments:

Post a Comment