தினம் என் பயணங்கள்

Posted by G J Thamilselvi On Wednesday, 16 September 2015 0 comments
ஆச்சர்யப்படத்தக விடயங்களை உள்ளடக்கியது வாழ்க்கை, வாழ்ந்துக்கொண்டிருக்கிறோமா? வாழ்வை இழந்துக்கொண்டிருக்கிறோமா என்பது அவரவர் மனதின் புரிதல் படி.

அப்பேருந்து நிலைய முன் பக்கத்தில் சாலையோரமாக நின்றுக்கொண்டிருந்தேன். மகளுக்கான காத்திருப்பு அது. காத்திருப்பே சுகம் தான் என்று சொல்லத் தோன்றும் அளவிற்கு நெருங்கிய சிநேகிதி அவள் எனக்கு.

ஒன்றையும் மறைக்காமல் ஒரு மகளால் தன் தாயிடம் பகிர்ந்துக்கொள்ள முடியுமா என்று அநேகந்தரம் யோசித்து இருக்கிறேன்.
மேலும் வாசிக்க

ஹார்ட் பீட் அறக்கட்டளையின் வாராந்திரக் கூடுகை 13.09.2015

Posted by G J Thamilselvi On Sunday, 13 September 2015 0 comments
செங்கம் நகரத்தில் இயங்கும் ஹார்ட் பீட் அறக்கட்டளையின் கிளை அலுவலகத்தில் இன்று (13.09.2015) வாராந்திர கூடுகை நடைப்பெற்றது. அதில்  ஹார்ட் பீட் அறக்கட்டளையின் செயல்வீரர் குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், மார்ஷல், நந்தக்குமார், சிவக்குமார். ஜி, ஜான், ஷமீர், அருள்மொழி, ஷம்ஷாத், சிவசக்தி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

செயல் வீரர் குழு தலைமை வீரர். செல்வன் தயாநிதி அவர்கள் விடியல் குறித்து சிறப்பு உரையாற்றினார்.

விடியல் என்ற தலைப்பில் முட்டையில் ஓவியம் வரைந்து தங்கள் கருத்துக்களை சக செயல்வீரர் குழு உறுப்பினர்களோடு பகிர்ந்துக்கொண்டனர்.

கற்கும் பாரதம் திட்டத்தின் உதவியுடன், எழுத படிக்கத் தெரியாதவர்களுக்கு கல்வி கற்பிக்க செயல் திட்டம் உறுதி செய்யப்பட்டது.

நன்றியுரையுடன் இன்றைய வாராந்திரக் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.


மேலும் வாசிக்க

இலக்கை நோக்கிய பயணம்!

Posted by G J Thamilselvi On Tuesday, 8 September 2015 0 comments
நாள் (06.09.2015)ஒரு வழியாய் அலுவலகங்களிலேயே வாழ்க்கையும் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. யக்கோவ் குப்பேத்தாக்கோவ் (அக்கா குப்பை எடுத்து வாங்க அக்கா)  என்று கூவும் பெண்மணியின் குரலோடு விடிந்தது இன்றைய இரவும்.

ஒருவழியாய் சீரான பாதையை நோக்கி பயணகிக்கிறேன் என்று எண்ணுகிறேன்.

இது இலக்கை நோக்கிய பயணம். மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நிறுவனத்தை உருவாக்கும் முயற்சி! எவ்வளவு யோசித்தும் அவர்களுக்கு ஏற்ற ஏதுவான தொழில் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும்  என் முயற்சி நிற்கப் போவதில்லை. அது தொடரும்.

புத்தக விற்பனையில் இறங்கியிருக்கிறோம்.  அநேகர் இந்த தொழில் வேண்டாம் என்று அச்சுறுத்தியபோதும், சரி இதையும்தான் செய்வோமே என்றொரு துணிச்சல். குச்சி ஐசே தயாரித்தாகிவிட்டது. இதையும் செய்துப் பார்ப்போம் என்று, இன்றைய  நாள் பொழுது முழுவதும் ஹார்ட்பீட் அறக்கட்டளையின் செங்கம் கிளை அலுவலகத்திலேயே கழிந்தது.

புத்தகம் அடுக்க ஒத்தாசை செய்த தம்பி குழந்தைகளை மெச்சிக்கொள்ளத் தோன்றியது.

வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப்பூச்சி
சட்ட தச்சது யாரு
உனக்கு சட்ட தச்சது யாரு

வண்ண வண்ணம்மா வண்ண வண்ணம்மா
பொட்டு வச்சது யாரு
உனக்கு பொட்டு வச்சது யாரு

மெதுவாய் ஆரம்பித்து உச்சஸ்தாயியில் குழந்தைகள் இயல்பாய்  பாடியது மகிழ்ச்சியாய் இருந்தது. ஜன்னலரோலத்தில் ஆரஞ்சு வண்ண பட்டாம் பூச்சி பறந்ததில் உதயமான பாட்டை எண்ணி மகிழ்ந்துக்கொண்டேன்.

நானும் குழந்தையாகவே இருந்திருக்கலாம் எந்த கவலையும் இல்லாமல். சாத்தியப்படாதவைகளுக்கே மனம் ஏங்குகிறது. 

இவ்வலுவலகம் உருவாக பண்புடன் குழுமத்தின் பங்கு பெருமளவில் இருப்பதால் இந்த பதிவின் மூலம் பண்புடன் குழுமத்திற்கு என் மனம் மார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். ஹார்ட் பீட் அறக்கட்டளையின் முன்னேற்றத்தில் கவனமாய் இருக்கும் எழுத்தாளர் உயர்திரு. வையவன் அவர்களையும் இந்நேரத்தில் நினைவுக்கூறுகிறேன்.

துவண்ட போது ஆறுதலாய் இருந்த நண்பர்களையும் இவ்விடத்தில் நினைவு கூறாமல் இருக்க இயலவில்லை.

ஹார்ட்பீட் சேவை நிறுவனம் மூவகை செயல்பாடுகளை  கையில் எடுத்திருக்கிறது. புத்தக விற்பனை மற்றும் பதிப்பு,  தையல்,  மற்றும் கணினி கல்வி, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி.

தையலில் முதல் கட்டமாக பெண்கள் தலையில் அணியும் பேண்ட் தாயரிக்கும் முயற்சியில் இருக்கிறோம். 

இன்றைய பொழுது இனிதே! இவ்வலுவலகத்தில் கடந்தது. 
மேலும் வாசிக்க

முனுசாமி என்கிற சின்னத்தம்பி!

Posted by G J Thamilselvi On Thursday, 3 September 2015 0 comments

யக்கோவ் குப்பேத்தாக்கோவ் என்கிற கூவலில் விடிந்தது 02.09.2015 ற்கான விடியல். குப்பை சேகரிக்கும் மூதாட்டியின் குரல். முன்பொருமுறை அவளோடு பேச்சுக்கொடுத்திருக்கிறேன்.

எத்தனை தெருவுக்கு போவீங்க?

மேலப்பாளையம், துக்காப்பேட்டை, சகாயமாதாதெரு அப்படியே திரும்பவும் குப்பை பிரிக்கிறாங்களே அங்க போய்டுவோம் என்றவள் தலையில் சாயம் போன வெளுத்தத் துண்டைக் கட்டியிருந்தாள்.

டீக்குடிக்க காசு குடேன் என்று உடன் இருந்தவள் கேட்க, த்த சும்மா கெட அதே எப்படி இருக்கு அதுக்கிட்ட போய் காசு கேட்டுக்கினு

உனக்கின்னாமே தெரியும் அது தாலுக்காபீஸ்ல வேல செய்யுது இல்ல மேடம் என்று இரண்டாமள் இழுக்க! சிரித்துக்கொண்டேன்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை செய்வது மாபெரும் மரியாதை தான், அம்மரியாதைக்குப் பின் ஏச்சும் இருக்கும்.

இந்த வரட்டு மரியாதையை ஒரு போதும் விரும்பியதில்லை நான். அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.  தெருவில் இருக்கும் குப்பையை அள்ளுவதும் சாக்கடையைத் தூர் வாருவதும் மிகவும் கஷ்டமான வேலை. கால்வாய் ஓரம் நிற்கும் போதே முச்சை உள்ளடக்கி சுவாசத்திற்கு தடைப் போட வேண்டியதாய் இருக்கிறது.

அன்று அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நான் அலுவலகத்திற்கு சென்ற போது, வட்டாட்சியரின் ஜீப் வாயிலை அடைத்தபடி நின்றிருந்தது. வட்டாட்சியர் தபேதாரிடம் என்ன அண்ணா இன்னைக்கு ஆபீஸ் இருக்கா எனக்கு என்றேன்.

நான் அரசாங்க ஊழியர் இல்லை.

அரசாங்கத்திடமிருந்து ஒரு நிறுவனம் டெண்டர் எடுத்திருக்க அந்நிறுவனத்திடம் நான் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.

எல்லாருக்கும் ஆப்சென்ட் போட்டுட்டாங்க நீ வேலை பாத்து என்ன பண்ணப்போற என்றார் அவர்.

இந்த நாளை என்ன செய்வது?

ஒரு யு டேர்ன் அடித்து,  ஹார்ட் பீட் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வந்தேன். சட்டென்று ஒரு யோசனை,  சொர்ப்பனந்தல் அலுவலகத்திற்கு சென்றால் என்ன? கொஞ்சம் அல்ல அதிகான துணிச்சலோடே! என்இளையத் தம்பிக்கு தொலைப்பேசி செய்தேன்.

நான் சொர்ப்பனந்தல் போறேன் நீ வரியா இல்லையா?

அவன் வருகிறேன் காத்திரு என்றான்.

அலுவலக வாசலிலேயே காத்திருந்த போது தான் அந்த நபரை சந்தித்தேன்.

மிக நெருக்கமானவர் அல்ல.

நான் சகாயமாதா தெருவில் குடியிருந்த போது மூன்று வீடுகள் தள்ளி அவர்கள் வீடு.

மின் வாரியத் துறையில் பணியாற்றி ரிட்டையர்ட் ஆனவர்.

அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் பற்றி ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறோம். போகும் போதும வரும் போதும் புன்னகைப்பதோடு சரி.

புன்னகை வார்த்தைகளின் பயன்பாடே இல்லாமல் ஒரு நெருக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி விடுகிறது.

அருகில் வந்தவரிடம்

எப்படி இருக்கீங்க என்றேன்

எங்கம்மா நல்லா இருக்குறது, அந்த பையன் இப்படி பண்ணிட்டானேம்மா,

ம் நானும் கேள்விப் பட்டேன் பெயில் எடுத்துட்டிங்களா?

ஒரே பையன் ஜெயிலுக்கு போகக் கூடாதுன்னு ஜட்ஜ் முன்னாடி பொய் சொன்னேன்.
அவங்க பொண்ணுக்கு பத்து பவுன் போட்டாங்க 4 லட்சம் ரொக்கமா கொடுத்தாங்க பாத்திரம் பண்டம் எதுவும் தரல, கல்யாண மண்டபத்துல ஐஸ்கிரீம் பார்லர் வைக்கனும்ன்னு சொன்னாங்க மெனக்கெட்டு போய் திருவண்ணாமலையில இருந்து எடுத்துட்டு வந்து வச்சேன்,

இப்ப எல்லாம் நஷ்டம், பொண்ணு வீட்ல கொடுத்ததை எல்லாம் கொடுத்துட்டோம் அவரின் குரல் கம்மியது.

அவன் பேர்ல என் வீட்டை எழுதி வச்சுட்டேன். ஜட்ஜ் முன்னாடி சொல்றான், எங்கப்பா அம்மா கண்டிப்பு அதான் மண்டபத்துல இருந்து போய்ட்டேன்.

மேலும் வாசிக்க

ஆணையிட ஏன் துணிந்தாய்!

Posted by G J Thamilselvi On Tuesday, 1 September 2015 0 comments

நிலவனே நின் வரவில்
நிறை மதியாய் மலர்ந்தேன் நான்
மேலும் வாசிக்க