தோழமை நீயடா!

Posted by G J Thamilselvi On Friday, 7 August 2015 1 comments

நாய்க்குட்டி ஒன்றின் தோழனைப்போல்
உன் நெருக்கத்தைத்
எப்போது தரப்போகிறாய்?


சடுதியில் பிரிந்து
விலகலைத் தோற்றுவிக்கிறாய்
மீண்டும் எப்போது வருவாய்
காத்திருந்து தவித்துப் போகிறேன்

அச்சந்திப்பின் பின்னும்
முன்னுமான அண்மைகளையும்
அந்நியத்தின் உச்சங்களையும்
அலசி ஆராய்கிறது சிந்தை

மோசமான அனுபவங்களை
சிந்திக்க தலைப்பட்ட போதும்
ஜன்னலோர இருக்கையும்
அனுப்ப மனமின்றி கூடவே
ஓடிவந்த உன் பாதங்களும்

பேசிக்கொண்டே இருக்கிறது
நீ என் மீது வைத்த
நட்பின் ஆழங்களை

1 comment:

  1. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete