.          


       
      குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் நேற்று முன்தினம் மேகலாயாவில் மரணம் அடைந்தார். தனது இறப்புக்காக விடுமுறை விடக் கூடாது என்றும்தான் இறந்தால்  ஒருநாள் கூடுதலாக பணி செய்ய வேண்டுமென்றும் அப்துல் கலாம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார்.


              இதனால்தான் தமிழகம்ஆந்திராகேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கலாமின் மறைவுக்காக தனியார் பள்ளிகள்கல்லூரிகளில் விடுமுறை அளிக்கப்படவில்லை. மத்திய அரசும் விடுமுறை அளிக்கவில்லை. மாறாக 7 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

       இந்நிலையில் தனது மறைவையொட்டி விடுப்பு அளிக்க கூடாதுகூடுதலாக பணி செய்ய வேண்டுமென்ற அப்துல்கலாமின் வேண்டுகோளின் படி ஆந்திர அரசு ஊழியர்கள் அனைவரும் நேற்று ஒரு நாள்ஒரு மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்தனர். 

இது குறித்து ஆந்திர அரசின் தலைமை செயலாளர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணராவ் கூறுகையில், ''அப்துல்கலாமின் வேண்டுகோளை ஏற்று அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,ஆந்திர அரசு ஊழியர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் வேலை பார்த்தனர்'' என தெரிவித்தார்.

   அதுபோல்கேரள அரசும் அப்துல் கலாமின் மறைவுக்காக விடுமுறை அளிக்கவில்லை. இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், '' அப்துல் கலாம் கேரளாவுக்கு வந்தபோதுதான்,  தான் திடீரென இறந்து போனால் எனது சாவுக்காக விடுமுறை கூடாது. அன்றைய தினம் அலுவலர்கள்ஊழியர்கள் அனைவரும் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டும். பள்ளிகல்லூரிகள் திறந்திருக்க வேண்டும் என்ற கூறியிருந்தார்.கலாமின் கருத்தை ஏற்று கேரள அரசு அதன் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லைஎன  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

      கலாமின் வேண்டுகோளை ஏற்று கேரளத்தில் நேற்று ஏராளமான அரசு ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை பார்த்தனர். வருகிற ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தினத்தில் வேலை பார்க்கப் போவதாக அறிவித்துள்ளனர். விகடன் செய்தி  29-07-2015  இணையச்செய்தி.

0 comments:

Post a Comment