ஆண்கள் பெண்களை அடக்கி வைப்பவர்கள் என்றெண்ணியிருந்தேன். நான் படித்ததிலேயே இரண்டாவது கவிதைத் தொகுதி நிழலில் படரும் இருள். கவிதையை புத்தகமாக கையில் தாங்கிப் படிக்காமல், இணையத்தில் அதிக கவிதைகள் படித்துண்டு. புத்தகமாய் படிப்பது தனி கிளர்ச்சியை தருகிறது. முதல் முறை படித்து பின் இரண்டாம் முறையும் படிக்கத் தோன்றிய புத்தகம் நிழலிலே படரும் இருள்.

     ஆண்கள் என்றால் பெண்களை அடக்கி ஆள்பவர்கள் என்றெண்ணியிருந்தேன் என்ற வரிக்கு வருகிறேன் மீண்டும். தன் மனைவியைத் தன் சகியாக சிநேகித்த முதல் ஆடவன் ஒருவனை எனக்குத் தெரியும். அத்தகையவர் எவரேனும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்றெண்ணி வியந்திருக்கிறேன். முதல் முறை நிழலிலே படரும் இருள் கவிதைத் தொகுப்பினைப் படித்த போது அந்த பக்கம் என் கண்களில் பட வில்லை. அம் முழு வெள்ளைத் தாளில் அழகாய் அச்சுக் கோர்க்கப்பட்டிருந்த அவ்வாக்கியம். 

மனைவியும் தோழியுமான என் உள்ளத்தரசிக்கு…

கவிஞர். நிஷாமன்சூர் அவர்கள் மீது வைத்திருந்த மரியாதையை, நட்புணர்வை மேலும் அதிகமாக்கியது.

மனைவிகள் கணவர்களிடம் எதிர்பார்ப்பது தோழமையைத்தான். அத்தகைய ஆண்கள் இருக்கிறார்கள் என்பதைக் கண் கூடாக கண்டுக்கொண்டிருப்பதில் ஆத்ம திருப்தி.

கவிதைகள் தனக்கான வடிவத்தை, தனக்கான உணர்வை தானே வடிவமைத்துக்கொள்ளும். ஒவ்வொரு கவிதையும் தன் தனித்துவத்துடன் 

பிறந்த குழந்தை போல!
நீ இரைத்துவிட்ட
எனக்கான உணவைப் பொறுக்க
நாடெங்கிலும் பறந்துக்கொண்டிருக்கும்
எளிய பறவை நான்

என் கால்களுக்கடியில்
பறக்கிறது காலம் – இக்கவிதையின் வரிகளில் லயித்துக்கொண்டிருந்து பின் அடுத்தடுத்த பக்கங்களை படிக்க ஒரு சாதாரண மனித உயிரில் நிகழ்ந்துக்கொண்டிருக்கும், இனிமேலும் ஏதோ ஓர் உயிருக்கு நிகழப்போகும் அனுபங்களில் ஊர்ந்துக்கொண்டிருந்தது அக்கவிதைகள்.

பொதுவாகவே நவீன கவிதைகள் கவிதைகள் அல்லவென்பது இலக்கிய இலக்கணவாதிகளின் வாதம்.

இலக்கணத்திற்கு அப்பாற்பட்டு உயரோட்டத்தைத் தாங்கி நிற்கும் சில கவிதைகள் அவ்வழி நின்று என் உள்ளத்தை தொட்டவை அநேகமாக இருப்பிப்பினும்! உண்மைத்தாங்கி அனுபத்தைப் பேசிய அக்கவிதைகளின் வரிகளை மீண்டும் அசைப்போடுகிறேன்.

பரிசைத் தவறவிட்ட குழந்தை
தன் தோழி பரிசுபெறும் நிகழ்வை
உற்சாகத்துடன் கொண்டாட
தேம்பித் தேம்பி அழுதுக்கொண்டிருந்தது
இரவு பகலாய்ப் பயிற்சி கொடுத்திருந்த
அம்மாக் குழந்தை
000
உறையில் இருக்கும் வாளின் சோகம்
தனிமை அல்ல!
000
வறுமை நெரித்த பால்யம்
நெரிசல் பஸ்பயணத்தில்
தோழி வற்புறுத்தி வாங்கிய
புத்தகங்களுடன்
டிபன்பாக்ஸூம் இருக்க!

மதிய உணவுப் பழைய சோறு
ஒழுகி வடிந்து
புத்தகங்களையும் அவள் கைகளையும்
நனைத்தது கண்டு பதறி!

அவமானத்தில்!
சுய இரக்கத்தில்!
வெறுப்பில்!

முதுகில் மொய்க்கும் கண்களை
நேருக்குநேர் சந்திக்கக் கூசி!

பாதி வழியில் இறங்கி
சாலையோரம் அழுது ஓய்ந்து!

நடந்தே பள்ளிக்குச் சென்ற
ப்ளஸ்டூ அனுபவம்
உங்களுக்கும் உண்டுமா?
000

காடிழந்த யானைகளின் துயரம் – சிநேக ஜீவனின் வலியுணர்ந்து எழுதப்பட்டிருந்தது பாராட்டுதலுக்குரியது. அக்கவிதையின் ஒவ்வொரு வரியிலும் கொழுந்துவிட்டு எரிகிறது உயிர்த்தன்மையின் ஜீவன்.

முகங்கள் கவனம்

நான் நானாயிருக்க
பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது
நீங்கள் என் முகத்தைப் பறித்துக்கொண்டு
முகங்களைத் தந்திருக்கிறீர்கள்
ஏறக்குறைய

எல்லா நேரங்களிலும் இந்த முகங்கள்
பொருத்தமாய் இருந்தாலும்
எப்போதாவது
சொந்தமுகம் அவசியமென உணர்கையில்
சிறகிழந்தாற்போல் தவிக்கிறேன்
கண்களை இடுக்கித் தேடியலைகிறேன் – கவிதை வரிகளில் வாசகன் தன் அனுபத்தைக் கண்டுணர்வதே கவிஞனின் வெற்றி. அவ்வெற்றி அனுபவத்தை அடைந்திருக்கிறார் கவிஞர் நிஷா மன்சூர் அவர்கள் இக்கவிதை வரிகளில்.

ஜூவாலஜி டீச்சர் – ஒவ்வொரு மாணவரின் உணர்வுக்குள்ளும் உயிர்த்திருக்கும் பிரியமான ஆசானின் பிம்ப வடிவம்.

வர்க்கித்தூள் – தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில் பால் மணம் மாறா மழலையின் வாசனை. தாயற்ற நிலையும், பசியின் பிணியும், மீண்டும் இக்கவிதையில் வாசகனைத் தன் முகமோ அல்லவெனில் நெருக்கமானவர்களின் முகத்தையோ காண வைத்திருக்கிறார் கவிஞர். இன்றும் டீயும், வர்க்கித்தூளும் காலை உணவாகக் கொள்வோர் அநேகர் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலரது உணவோ ஒரு டீயோடும் கூட முடிந்து விடுகிறது.


நிழலில் படரும் இருள் – மனித மனதின் அந்தரங்கத்தை வெளிக்கொணரும் முயற்சி.
மேலும் வாசிக்க
.          


       
      குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் நேற்று முன்தினம் மேகலாயாவில் மரணம் அடைந்தார். தனது இறப்புக்காக விடுமுறை விடக் கூடாது என்றும்தான் இறந்தால்  ஒருநாள் கூடுதலாக பணி செய்ய வேண்டுமென்றும் அப்துல் கலாம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார்.
மேலும் வாசிக்க

டாக்டர் அப்துல் கலாம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது.  ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு.  உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.  உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்!  கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.
மேலும் வாசிக்க