சஹானாவின் மூக்குத்தி - சிறுகதை

Posted by G J Thamilselvi On Friday, 5 June 2015 0 comments
இலியாஸ் ஒருக்களித்துப் படுத்திருந்தார். வழக்கமான அந்த குறட்டைச் சப்தம் கேட்கவில்லை. சுக்குக் காப்பி கொதிக்க வைக்கும் பாத்திரம் ஙொய் என்று நான் கொதித்து விட்டேன் என்று குரல் கொடுத்தது. இனி மேல் எழுந்கு குளித்து நமாஸ் செய்துவிட்டு காப்பி பாத்திரத்தை சைக்கிளில் ஏற்றிக் கயிறு கட்டி இறுக்கி விட்டு அவர் கிளம்ப வேண்டும். சஹானா படித்துக்கொண்டிருந்த அறிவியல் புத்தகத்தை கவிழ்த்து வைத்து விட்டு அவரைத் திரும்பி பார்த்தாள்.
சாதாரணமாக அவர் இவ்வளவு நேரம் தூங்க மாட்டார்.
“என்ன தாத்தா உடம்புக்கு சுகமில்லையா?” என்று கழுத்தில் கைவைத்துப் பார்த்தாள் சஹானா. உடல் சில்லிட்டிருந்தது.
தாத்தா என்று அசைத்துப் புரட்டினாள். கண்கள் முழுவதுமாய் மூடி உறங்கும் பாவனை காண்பித்தது. நாசியில் கை வைத்துப் பார்த்தாள். மூச்சுக்காற்று எங்கோ ஒளிந்து விளையாடியது. வயிறு மேலெழும்புகிறதாவெனப் பார்த்தாள். அது தன் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.
தாத்தா உயிரோடில்லை.ஒரு நிமிடத்திற்கு முன் நம்பிக்கையின் விழுதுகள் இங்கும் அங்கும் நின்ற நிலை போய் எல்லாம் வெட்டுண்டு விழுந்த ஒரு சூன்யம் தன்னைக் கவிந்ததை உணர்ந்தாள்.
மேலும் வாசிக்க

மேலும் வாசிக்க