அந்நியத்தின் உச்சம்

Posted by G J Thamilselvi On Tuesday, 30 December 2014 1 comments
அவகாசம் கேட்கிறாய்
கடந்த அத்தனை வருட
அவகாசம் போதாதா?

நின்று நிதானித்து
பின் யோசித்தேன்
மூளையை கசக்கியதில்
உண்மை புலப்பட்டது

நீ அந்நியன்
யாரோ ஒருவன்
உன்னிடத்தில் என்னவனை
நாடுவது
பைத்தியத்தின் உச்சம்
என்பது


உறவிருக்கிறது
உரிமையும் நிலைக்கிறது
நீயோ அந்நியனாய்
முன் நிற்கிறாய்

காத்திருப்பின்
கணங்கள் பயனற்று
உதிர்ந்து போவதை
கண்டது மனக் கண்கள்

நலமா என்று வினவ
நாள் நட்சத்திரம்
பார்க்க அவகாசம்
தேவைப்படுமோ?

நீ அந்நியத்தின்
உச்சமோ
காலத்தின் எச்சமாய்
நிற்கிறாளோ இவள்

அனுபவ யாத்திரையின்
ஒரு மைல்கல்
கடந்தேன்
வலித்த இதயத்தை
தேற்றியபடி
மேலும் வாசிக்க