பாதையின் வழி அங்கே!

Posted by G J Thamilselvi On Tuesday, 14 October 2014 0 comments


உன் எண்ணங்களால்
ஏன் தீண்டுகிறாய்
நீ யாரோவென
ஆனப்பிறகும்

தூயதான அன்பை
திருப்பினாய்
வேண்டாம் போவென
அழிச்சாட்டியமாக
கண்ணீரும் தவிப்பும்
கூக்குரலும் அழுகையும்
உன் ஜீவனைத்
தீண்டவில்லை
அதன் மெய்த்தன்மையை
சோதித்து
வலிகளால் பதியனிட்டாய்
நாட்களை
உனக்கானதொரு இடமென்று
கிழிசலை முன் எறிந்தாய்
அது எனக்கானதாகக்
கொள்வதெப்படி
மீண்டும் வந்து நில்
நட்பினால் சிருங்காரிப்பேன்
என்பாயோ - அது
காதலில் கரைந்த பிறகு
பட்டுபோன வேருக்கு
நீருற்ற வந்தாயோ
இயல்புணராமல்
உன் மன ராஜ்யத்தின் படி
போ உன் பாதையின் வழி அங்கே
பாதை மாறாது பயணி
திரும்பிப் பார்ப்பானேன்
நாம் ஒன்றாய் பயணித்த
அந்த நாட்களை!
உன் எண்ணங்களால்
ஏன் தீண்டுகிறாய்
நீ யாரோவென
ஆனப்பிறகும்
தூயதான அன்பை
திருப்பினாய்
வேண்டாம் போவென
அழிச்சாட்டியமாக
கண்ணீரும் தவிப்பும்
கூக்குரலும் அழுகையும்
உன் ஜீவனைத்
தீண்டவில்லை
அதன் மெய்த்தன்மையை
சோதித்து
வலிகளால் பதியனிட்டாய்
நாட்களை
உனக்கானதொரு இடமென்று
கிழிசலை முன் எறிந்தாய்
அது எனக்கானதாகக்
கொள்வதெப்படி
மீண்டும் வந்து நில்
நட்பினால் சிருங்காரிப்பேன்
என்பாயோ - அது
காதலில் கரைந்த பிறகு
பட்டுபோன வேருக்கு
நீருற்ற வந்தாயோ
இயல்புணராமல்
உன் மன ராஜ்யத்தின் படி
போ உன் பாதையின் வழி அங்கே
பாதை மாறாது பயணி
திரும்பிப் பார்ப்பானேன்
நாம் ஒன்றாய் பயணித்த
அந்த நாட்களை!

0 comments:

Post a Comment