மௌனமாய் பேசுகிறேன் - 6

Posted by G J Thamilselvi On Saturday, 16 August 2014 0 comments
“அம்மா எங்கயோ தூக்கிட்டு வேகமா ஓடுறா, வழியில யாரோ நிக்கவச்சு பேசுறாங்க, 

என்னாச்சு டீசரு, 

இல்ல நேத்ராவுக்கு காய்ச்சல் கொதிக்குது, டாக்டருக்கிட்ட செங்கம் போலாம்ன்னு,

 இன்னா வரம் வாங்கிகினு வந்தியோ அந்தப்பக்கம் அந்த குடிக்காரங்கிட்ட இடி இந்த பக்கம் இந்த பொண்ணு, இப்படி இசுத்துக்கினு கிடக்கறதுக்கு செத்தாச்சும் போவலாம்

அம்மா ஏதும் பேசல, ஒடுறா அந்த பொம்பளையோட குரல் காத்துல தேஞ்சுபோய்ட்டே இருக்கு

நான் செத்துறனுமா, ஏன் இவங்க எல்லாம் என்னைய சாகனும்ன்னு எதிர்பார்க்கறாங்க, நான் வாழறதுக்கு பொறக்கலியா? நான் என்ன பாரமா இவங்களுக்கு, அப்ப அம்மாக்கும் பாரமா?

சில்லுன்னு காத்து அம்மா மடியில 
மேலும் வாசிக்க