உழைப்பாளர் தினம் - வாழ்த்துக்கள்

Posted by G J Thamilselvi On Thursday, 1 May 2014 2 comments

     


    தண்ணீரும் பெனாயிலும் கலந்த திரவத்தால் நிரம்பியிருந்த பக்கெட்டில் மாஃபை தோய்த்து தரையை அழுந்த துடைத்துக்கொண்டிருந்தாள் அவள்.

    வட்டாட்சியர் அலுவலகத்தின் புதிய துப்புரவு தொழிலாளி, மசால்ஜி என்று அந்த பதவிக்கு ஏதோ ஒரு பெயரை சொன்னார்கள்.

    நான் உள்ளே நுழைந்ததும், வணக்கம்மா என்றாள். நான் பதிலுக்கு வணக்கம்மா என்றதும் மலர்ந்து சிரித்தாள்.

    ஏம்மா உனக்கொரு விஷயம் தெரியுமா என்றளிடம், என்ன என்று வினவினேன்.

  நேத்து (தலைமையிடத்து துணை வட்டாட்சியர்) 1Dt. அம்மா யாரையாச்சும் ஆள் வச்சு டாய்லட் கழுவ சொன்னாங்க, இந்த ஜெயசீலி (அலுவலக உதவியாளர்) நாம யூஸ் பண்றது தானம்மா எதுக்கு 150 ரூவா கொடுக்கறதுன்னு சொல்லிட்டு, டாய்லட் ல வந்து புடவைய முழங்கால் அளவுக்கு தூக்கி பிடிச்சுக்கினு, தண்ணிய மட்டும் ஊத்துரா, நான் இன்னமோ அவளுக்கு அடிமை மாதிரி தொடப்பத்தை போட்டு தேய்க்கனுமாம்

    அந்த வார்த்தைகள் வருத்தம் தோய்ந்து காடியாய் புளித்தது. ஒரு அருவெறுப்பான முகச் சுளிப்பு என்னிடத்தில்.

   வேறு நபர் செய்ய வேண்டிய வேலையை, இன்னொருவர் மீது திணிப்பது எந்த விதத்தில் நியாயம்.

    எம் புருஷன் செத்து வருஷம் 20 ஆச்சு, அன்னிலேந்த இன்னிக்கி வரைக்கும் ஓயாத ஒழைப்பு தான்.

   களை வெட்ட, நெல்லு நட, ன்னு ஆரம்பிச்சு கலவை தூக்கினதுன்னு, இப்ப இங்க வந்து நிக்க சாயல, புள்ளைங்களுக்கு ஒரு நல்லது கெட்டது செஞ்சு போட நாழி இல்ல. எப்பவும் இந்த கொட்டை அரிசி சொசைட்டி சோறுதான். புளித்தண்ணி தான்னு சொல்லிக்கொண்டிருந்தவளின் உழைப்பை மதிக்கத் தோன்றியது. அவளையும் தான். தனி ஒரு பெண்ணாய் நின்று மூன்று குழந்தைகளை பேணுவது சாதாரண விஷயமா என்ன?

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

2 comments:

  1. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்த அவலங்கள் மாற வேண்டும்! உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete