அந்நியத்தின் உச்சம்

Posted by G J Thamilselvi On Tuesday, 30 December 2014 1 comments
அவகாசம் கேட்கிறாய்
கடந்த அத்தனை வருட
அவகாசம் போதாதா?

நின்று நிதானித்து
பின் யோசித்தேன்
மூளையை கசக்கியதில்
உண்மை புலப்பட்டது

நீ அந்நியன்
யாரோ ஒருவன்
உன்னிடத்தில் என்னவனை
நாடுவது
பைத்தியத்தின் உச்சம்
என்பது


உறவிருக்கிறது
உரிமையும் நிலைக்கிறது
நீயோ அந்நியனாய்
முன் நிற்கிறாய்

காத்திருப்பின்
கணங்கள் பயனற்று
உதிர்ந்து போவதை
கண்டது மனக் கண்கள்

நலமா என்று வினவ
நாள் நட்சத்திரம்
பார்க்க அவகாசம்
தேவைப்படுமோ?

நீ அந்நியத்தின்
உச்சமோ
காலத்தின் எச்சமாய்
நிற்கிறாளோ இவள்

அனுபவ யாத்திரையின்
ஒரு மைல்கல்
கடந்தேன்
வலித்த இதயத்தை
தேற்றியபடி
மேலும் வாசிக்க


நான் மாற்றுத்திறனாளி என்பது எததனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் நானே என்னை ஊனமானவள் என்று ஏற்றுக்கொள்ள அநேக வருடங்கள் தேவையாய் இருந்தது. குழந்தையாய் இருக்கும் போது நானும் நோய் தீர்ந்து நன்றாக நடந்துவிடுவேன் என்ற எதிர்பார்ப்பும், மற்ற குழந்தைகளைப் போல் நானும் விளையாட வேண்டும் என்றஆசையும் இருந்தது.இந்த பகிர்தல் உங்கள் அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்துவதற்காக அல்ல. ஒரு மாற்றுதிறன் படைத்த குழந்தையின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அறிந்தவளாய்ப் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே!
மேலும் வாசிக்க

பாதையின் வழி அங்கே!

Posted by G J Thamilselvi On Tuesday, 14 October 2014 0 comments


உன் எண்ணங்களால்
ஏன் தீண்டுகிறாய்
நீ யாரோவென
ஆனப்பிறகும்
மேலும் வாசிக்க

இதயத்துடிப்பு செய்தி மடல்

Posted by G J Thamilselvi On Saturday, 13 September 2014 1 comments
பெருமதிப்பிற்குரிய நண்பர்கள் அனைவருக்கும்

பணிவார்ந்த அன்பு வணக்கங்கள்.

இது இதயத்துடிப்பு செப்டம்பர் இதழ். இதன் தரம் மற்றும் பின்னணியில் உள்ள உழைப்பு உங்களைக் கவர்ந்திருக்கும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு, இது நிற்காமல் வெளிவர வேண்டுமல்லவா?
மேலும் வாசிக்க

மௌனமாய் பேசுகிறேன் - 6

Posted by G J Thamilselvi On Saturday, 16 August 2014 0 comments
“அம்மா எங்கயோ தூக்கிட்டு வேகமா ஓடுறா, வழியில யாரோ நிக்கவச்சு பேசுறாங்க, 

என்னாச்சு டீசரு, 

இல்ல நேத்ராவுக்கு காய்ச்சல் கொதிக்குது, டாக்டருக்கிட்ட செங்கம் போலாம்ன்னு,

 இன்னா வரம் வாங்கிகினு வந்தியோ அந்தப்பக்கம் அந்த குடிக்காரங்கிட்ட இடி இந்த பக்கம் இந்த பொண்ணு, இப்படி இசுத்துக்கினு கிடக்கறதுக்கு செத்தாச்சும் போவலாம்

அம்மா ஏதும் பேசல, ஒடுறா அந்த பொம்பளையோட குரல் காத்துல தேஞ்சுபோய்ட்டே இருக்கு

நான் செத்துறனுமா, ஏன் இவங்க எல்லாம் என்னைய சாகனும்ன்னு எதிர்பார்க்கறாங்க, நான் வாழறதுக்கு பொறக்கலியா? நான் என்ன பாரமா இவங்களுக்கு, அப்ப அம்மாக்கும் பாரமா?

சில்லுன்னு காத்து அம்மா மடியில 
மேலும் வாசிக்க

மேலும் வாசிக்க

காதல் பார்வை

Posted by G J Thamilselvi On 2 comments
துணைக்கான ஏக்கம்
எதார்த்த உலகில்
இயல்பாய் நிகழ்வது தான்
மேலும் வாசிக்க

தினம் என் பயணங்கள் -18

Posted by G J Thamilselvi On Monday, 26 May 2014 3 comments

பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத் தேர்வு

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி​


பயணங்களில் ஏற்படும் அனுபவங்கள் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்து விடுவது உண்டு. இந்த பயணம் கல்வி உயர்வுக்கான பயணம். 19.05.2014 முதற்கொண்டு 23.05.2014வரையிலான தமிழ் இலக்கியம் (B.LIT) பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத்​ தேர்வு.  இதற்கு முன்பே பி.சி.  [B.C.A -Bachelor of Computer Application] ​பட்ட படிப்பிற்காக விண்ணப்பித்துப் பணம் கட்டியும் என்னால், அழைத்து செல்ல ஆள் இல்லாததாலும், பிராக்டிகல் வகுப்பில் கலந்து கொள்ள இயலா காரணத்தினாலும் தேர்வு எழுத முடியாமல் போனது.
மேலும் வாசிக்க

உழைப்பாளர் தினம் - வாழ்த்துக்கள்

Posted by G J Thamilselvi On Thursday, 1 May 2014 2 comments

     


    தண்ணீரும் பெனாயிலும் கலந்த திரவத்தால் நிரம்பியிருந்த பக்கெட்டில் மாஃபை தோய்த்து தரையை அழுந்த துடைத்துக்கொண்டிருந்தாள் அவள்.

    வட்டாட்சியர் அலுவலகத்தின் புதிய துப்புரவு தொழிலாளி, மசால்ஜி என்று அந்த பதவிக்கு ஏதோ ஒரு பெயரை சொன்னார்கள்.
மேலும் வாசிக்க