மண்ணில் வந்த தேவ மைந்தன்

Posted by G J Thamilselvi On Tuesday, 24 December 2013 4 comments
அன்பு வழி தேவ மைந்தன் மண்ணில் வந்த மரி மைந்தன்
நெஞ்சில் வந்த இருள் நீக்க ஒளியாய் வந்துதித்தான்


ஞானத்தின் தேவனே சத்திய கீதனே
வெண்பனி சுவாசமே லீலியின் வாசமே
நேச்ச்சுடரே  கண்டேன் மன்னா
நேச்ச்சுடரே நெஞ்சில் இன்றே வந்தீர்
குழந்தையின் தாசனே...பெண்களின் நேசனே
எளிமையின் வாசனே எளியவன் எழிலனே

வார்த்தையும் நீர் வாழ்க்கையும் நீர்
சத்யமும் நீர் சகலமும் நீர்
விழியிலும் நீர் வழிதுணை நீர்
தூயரும் நீர் துதியிலும் நீர்
பாவங்களை போக்கிட ஏழைதுயர் நீக்கிட
பாரினில் பாலகன் வந்துதித்த்தீர்
பாரங்களை தாங்கிட வெற்றிகொடி நாட்டிட
சாத்தானை பாத்த்தின் கீழ் மிதித்தீர்


சாலமன் ராஜனே சங்கையின் ரோஜனே
ஆப்ரகாம் தேவனே உடன்படிக்கை புனிதனே
நீதி உயிரே பொன்நாள் இன்நாள்
நீதி உயிரே என்னில் தஞ்சம் வந்தீர்
அற்புத தேவனே விசுவாச ஜீவனே
நம்பிக்கை ராஜனே வறியவன் தோழனே

ஞானத்தின் தேவனே சத்திய கீதனே
வெண்பனி சுவாசமே லீலியின் வாசமே
நேச்ச்சுடரே கண்டேன் மன்னா
நேச்ச்சுடரே நெஞ்சில் இன்றே வந்தீர்
குழந்தையின் தாசனே...பெண்களின் நேசனே
எளிமையின் வாசனே எளியவன் எழிலனே

4 comments:

 1. இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. சிறப்புக் கவிதை வெகு சிறப்பு
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அற்புதமான கவிதை தமிழ்ச்செல்வி!!..

  மரியாளின் மைந்தன் மனிதருள் புனிதன்
  புவி மீது வந்த பொன்னான திருநாள்
  மன்னிருள் நீங்கிட மாபாவம் தீர்த்திட‌
  பொன்னுலகு நீங்கி இப்பூமியில் பிறந்தான்
  அன்பென்னும் பாதையே அகிலத்தில் உன்னதம்
  என்று நாம் உணர்ந்திட தன்னையே தந்தான்!!

  மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. சகோதரி ’விண்முகில்’ தமிழ்ச்செல்வி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete