விடியலை நோக்கி.......!

Posted by G J Thamilselvi On Tuesday, 31 December 2013 5 comments

     ஒடுக்கப்பட்ட இனத்திற்கே உண்டான மூர்க்கம், இடுங்கி துளைக்கும் அவள் கண்களில் வழிந்தது. கரேல் என்று அண்டங்காக்கையின் கருப்பில் அவள் தேகம். சாராசரிக்கும் குள்ளமான, வினயம் பிடித்தவள் என்று பிறர் சாடும் ஒல்லி குச்சி உடம்புக்காரி. சுருண்டு அடர்ந்த கார்கூந்தல், தேங்காய் எண்ணெயின் வாசமே இல்லாமல் பரட்டையாகியிருந்தது. அவள் முகத்தில் பசியின் அடையாளம் சோர்வாய் படர்ந்திருந்தது. வறண்டிருந்த பூமியின் சுடு மண்ணுக்குள் பாதங்கள் புதைய வெம்மையின் தகிக்கும் தணல் பாதங்களை தாக்கியபோதும், பழக்கமோ அல்லது உரம் ஏறிய மனதின் திட்பமோ என்று உணரமுடியா வேகத்தோடு பாதங்களை மாற்றி அவள் இலக்கை நோக்கி நடைபயின்றாள். அவள் தலையின் சீமாட்டு துணிக்கு மேலாக விறகு சுமை. வலது கரம் சுமையை பற்றியிருக்க இடதுகரம் வீசி, இடை இருபுறமும் அசைய நடன மாதின் இடையசைவு நளினத்தை ஒத்தார் போன்றிருந்தது.
மேலும் வாசிக்க

மண்ணில் வந்த தேவ மைந்தன்

Posted by G J Thamilselvi On Tuesday, 24 December 2013 4 comments
அன்பு வழி தேவ மைந்தன் மண்ணில் வந்த மரி மைந்தன்
நெஞ்சில் வந்த இருள் நீக்க ஒளியாய் வந்துதித்தான்
மேலும் வாசிக்க