என் பால்யத்து சிநேகிதனே...!

Posted by G J Thamilselvi On Saturday, 2 November 2013 4 comments
அன்பென்னும் அடை மழையே
உள்ளத்தில் விழுந்தவனே
மனதெனும் கானகத்தின்
வழி ஒளியே…!


உலகின் காவலனே
என் உள்ளத்து நாயகனே….!
முன் வந்து நின்றதொரு நாள்
காதல் முதல் மழையே…!

திசை தொலைத்த பறவை போலே
தவித்து நின்றேனே
திசைக்காட்டி இசை மீட்டவே
இதயத்தில் வந்தாயே…!

மழலையில் கரம் பற்றி
நடத்திச் சென்றாயே…!
உன் மடியினில் தலைவைக்க
உறங்க வைத்தாயே…!

உனக்கொரு வாய் ஊட்டி
நானே தின்று விட்ட
மழலைக் குறும்பினை
ரசித்துச் சென்றாயே….!

எச்சில் பட நான் கொடுத்த
எச்சில் பண்டம் ருசித்தவனே…!
மிச்சமின்றி என்னுள்ளே
அன்புரு எடுத்தவனே…!

விண்ணுக்கு நாயகனே
உன் விண்ணரசி நானாக
பாவித்த நாட்பொழுதை
ரசித்துச் சிரித்தவனே

உருவப் பெருவெளியே…!
என் தனிமைத் தகர்த்தவனே…!
பல்லாங்குழி விளையாடி
எனக்காகத் தோற்றவனே….!

உன் கண்ணை நான் மூடி
உன் பின்னே நான் ஒளிந்து
உன்னிடமே எனை மறைத்த
நாட்கள் திரும்ப கொடு
என் பால்யத்து சிநேகிதனே…!

4 comments:

 1. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. ///திசை தொலைத்த பறவை போலே
  தவித்து நின்றேனே
  திசைக்காட்டி இசை மீட்டவே
  இதயத்தில் வந்தாயே///

  உன்னத வரிகள் தமிழ்ச்செல்வி.

  பாராட்டுகள்.

  சி. ஜெயபாரதன்

  ReplyDelete
 3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 4. வணக்கம் !


  வலைச்சரத்தில் பார்த்தேன் தங்கள் அறிமுகம்
  அழகிய கவிதை
  வாழ்த்துக்கள்

  வாழ்கவளமுடன்

  ReplyDelete