நாடகம் என்று

Posted by G J Thamilselvi On Sunday, 6 October 2013 0 comments
நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நாடகத்தில்
இறத்தல் காதாபாத்திரம் ஏற்றவர்கள்
கச்சிதமாக இறந்தார்கள்


தலை ஒன்று பந்தாய் உருண்டு
பக்கத்து கட்டிடத்தில் விழுந்து
அலற வைத்தது நடிகர்களை

குழந்தை ஒன்றின் உடல்
சதை துணுக்குளாக சிதறி
தாயின் உயிரை பறித்துக்கொண்டது

தீயணைப்பு படையின் வேலை
கனக்கச்சிதம்…..!
சுற்றிலும் வேடிக்கை பார்க்கவென
திரண்டெழுந்த துணை நடிகர்கள்

அலுவலர்களாக வந்த வட்டாட்சியர்
கோட்டாட்சியர் கலெக்டர்
அதிர்ச்சி முகம் தாங்கிய நிலை
ஆஹா பிரமாதம்
அத்தனை இயல்பான நடிப்பு

தடி தாங்கிய காவற்படை
அடிப்பதாக பாவனை செய்து
பார்வையாளர்களாய் நடித்தவர்களை
விலக்கி விரட்டியது கை தேர்ந்த நடிப்பு

ஆம்புலன்ஸ் பறந்தது குறித்த நேரத்தில்
துணை நடிகையாய் கடந்த நான்
மருத்துவர்களின் ஜடமான முகத்தையும்
விரைவு நடையின் காலணி சப்தத்தையும்
கற்பனை செய்துக்கொண்டேன்

கதறி அழும் ஓலங்களின் சப்தத்தை
செவியில் செயற்கை இது கடந்து போகும்
என்று மனதை தேற்றிக்கொண்டேன்

மரணத்தின் வாயிலை நானும் கூட
கடக்க நேரிடும் நடிப்பு தான் இது என்று
திரும்ப திரும்ப சொல்லிக்கொண்ட போது
காதில் விழுந்தது அந்த குரல்
அக்கா காய் வாங்கிக்கிட்டு சீக்கிரம் ஓடனும்
குழந்தைங்க தனியா கிடக்கும்

இந்த நாடகத்தில் அவரவர் கதாபத்திரத்தின் படி
கைதேர்ந்த நடிகர்கள் இங்கே
ஏனோ நடிகர் திலகமும் ஒரு கணம் தோன்றி
நினைவு அடுக்குகளில் கலைந்து போனார்.

0 comments:

Post a Comment