மயிலிறகு...!

Posted by G J Thamilselvi On Sunday, 6 October 2013 0 comments


பத்திரமாக வைத்துக்கொள்ள
மயில் இறகின் ஒரு இழை இருந்தது என்னிடத்தில்
நீளமான இழையை சரிபாதியாய் கிள்ளி
ஒன்றை என் சிநேகிதி கொடுத்தது 


புத்தகத்தின் நடுவிலே வைத்து
பென்சிலை திருவின தூளை அதற்கு உணவாக கொடுத்து
நாளையோ நாளை மறுநாளோ குட்டிப்போடும் என்று
தவிப்போடு காத்திருந்த நாட்கள்

புத்தகம் திறக்கப்படும் ஒவ்வொரு நாளும்
ஒரு குட்டி மயிலிறகை தேடும் மனம்
வருடப்படும் நட்புணர்வில் நட்பை தேடுகிறது
கடந்து போன நிகழ்வின் நினைவுத் துளிகளில்

என்றோ நடந்து முடிந்த பால்ய நிகழ்வு
பசுமை கோர்த்து சிரிக்கிறது
உறக்கம் வரா இரா பொழுதின் இறுக்கத்தில்
அணு அணுவாக பின்னோக்கி பயணித்து

0 comments:

Post a Comment