ஈரப்படட்டும் நம் காதல்

Posted by G J Thamilselvi On Sunday, 6 October 2013 2 comments


ஒரு நாள் தனி பொழுதில்
இதயத்தின் காதலை மலர்களாக ஏந்தி
உன்னை தேடி வந்தேன்

இருக்கிறாய் என்று சொன்னது காட்சி
இல்லாதிருந்தாய் நீ 
இருந்தும் பாராது போனாயே என்று
பரிதவித்து நின்றேன்

மலர்களோடு நேசத்தை
புதுப்பிக்க வந்த என்னை
காதல் மரணத்தின் வாசலில் தனித்து
விட்டு சென்றவனே

காதல் உயிர் ஊற்றி எனை
உணர்வு ஊட்ட வா
அன்பின் வெற்றிட வறட்சியில்
நீரூற்றாக ஈரப்படட்டும் நம் காதல்.

2 comments:

 1. அருமையான காதல் வரிகள்! சிறப்பான படைப்பு! நன்றி!

  ReplyDelete
 2. வணக்கம்

  மலர்களோடு நேசத்தை
  புதுப்பிக்க வந்த என்னை
  காதல் மரணத்தின் வாசலில் தனித்து
  விட்டு சென்றவனே

  கவிதையின் வரிகள் மிக மிக நன்று வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete