உணர்வுகளின் கிறுக்கல்கள் - !

Posted by G J Thamilselvi On Monday, 9 September 2013 0 comments
ரோஜா மலரின்
 மென்மைக்குள் நீர்த்து 
போகிறது என் சுவாசம்

***

புல்லின் அசைவில் 
அழிந்து போகிறது 
புறவெளியின் அழுகுரல்கள்.


***

அழுகுரலின் ஓலத்தில் 
இசையை காண்பவள் நான்

***


எட்டியே நின்றுவிடுங்கள்
இங்கு வலிகளின் சுவடுகள் மட்டுமே
மகிழ்வின் மாட்சிகளுக்கு இடமில்லை.

***நட்பாக நட்பே வா
இனமற்ற பெருவெளியில்
அன்பை சுகிப்போம்


பெருங்கடலின் மென் உணர்வை 
பகிர்ந்தளிக்க எண்ணுகிறேன்
மற்றொரு பெருங்கடலின்
கொந்தளிப்பில்
காணாமல் போகிறது அது

***வாழ்தல் மரணமுற்று போகிறது
குளிரில் முனகும்
தெரு நாயை அணைத்து 
தேற்ற முடியாத போது
***பொக்கை வாயின் புன் சிரிப்பில்
காந்தங்களை கொட்டி வைத்தது யார்?

***பசுவும் கள்ளத்தனம் செய்கிறது
திருடுகிறான் என உணர்ந்து
பால் மடியை இறுக பிடித்து
0 comments:

Post a Comment