உணர்வுகளின் கிறுக்கல்கள்...!

Posted by G J Thamilselvi On Monday, 9 September 2013 3 comments


பசுவின் வருடலில் 
சுகித்து நிற்கிறது கன்று
லயித்து போகிறேன் நான்

***அப்பாவினிடத்தில்
அம்மாவை கண்டேன்
அவர் என் தலை வருடிய போது

***
அம்மா அப்பாவானாள்
கோபத்தின் உச்சத்தில்
பிரம்போடு
சிரித்து வைத்தேன் நான்
சிலிர்த்து போனாள் அவள்

***கிள்ளினால் வலிக்கும் என்று
சூடுவதில்லை நான்
ரோஜாவை

***நம்பிக்கையின் சாரத்தில் மட்டுமே
உயிருடன் இருக்கிறது நட்பு


***

வார்த்தைகளில்
கொட்டப்படுகிறது
உள்ளத்தின் நினைவுகள்
நட்பென்றேன் 
நட்பாக வந்தாய்
சந்தேகத்தை சாரல் போல்
தெளிக்க எங்கே கற்றாய்

***சேவை என்பது இல்லை என்றான்
மனித நேயம் போற்றப்படுதலில்
சேவை என்றொரு வார்த்தை
அர்த்தமிழந்து போனது
மனித நேயத்தின் அர்த்தம் என்ன
கேட்க மறந்தேன் நான்

***வாழ்வியல் தேடலின் நிமித்தம்
நேசங்களை வார்த்தைகளில்
வார்த்துவைக்கிறேன்
அழகியலாய் தொடருமோ என

***

3 comments:

 1. கவிதை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உணர்வுகள். அருமை

  ReplyDelete
 2. கவிதை அருமை.. !!!

  ********

  கிள்ளினால் வலிக்கும் என்று
  சூடுவதில்லை நான்
  ரோஜாவை

  ********

  எனது தளத்தில் இன்றைய பதிவு இது.

  சுட்டி; புதிய "டெராபைட் இன்டர்நல் மெமரி" கிராஸ்பார்..!

  ReplyDelete
 3. நம்பிக்கையின் சாரத்தில் மட்டுமே
  உயிருடன் இருக்கிறது நட்பு...

  ReplyDelete