யாரோ நடக்கிறார்கள்

Posted by G J Thamilselvi On Sunday, 29 September 2013 2 comments


காற்றில் யாரோ நடக்கிறார்கள்
கால்கள் முடக்கிக்கொண்டு
காற்றில் யாரோ சிரிக்கிறார்கள்
இதழ்கள் இறுக்கிக்கொண்டு


கைவீச தோன்றும் போது
திசைகள் அது அருகில் இல்லை
திசை தேடி ஓடும் போது
திசை திருடன் காணவில்லை

உயிரது அழுதிடும் போது
தவித்திடும் மனங்கள் இல்லை
வறுமையில் பசித்திடும் போது
தருவதற்கு யாருமில்லை

அழுகை அது இசைத்திடும் போது
ஆழ் மனதின் முழுநிலை
அழுகை என்னும் ஓலத்தின் போது
அன்பு எங்கும் வறுமை நிலை

காற்றில் யாரோ நடக்கிறார்கள்
பொய்யை விதைத்துக்கொண்டு
காற்றில் யாரோ பறக்கிறார்கள்
உண்மை மறைத்துக்கொண்டு

தவித்திடும் இதயங்கள்
உலகத்தில் பல உண்டு
ஒலித்திடும் அழுகையில்
தவித்திடும் மனம் உண்டு

நிலை அதை பாராது
அணைத்துக்கொண்ட உயிர்கள் உண்டு
துணிச்சல் எனும் நேர்க்கோட்டில்
அன்பினை உயிர்த்துக்கொண்டு


காற்றில் யாரோ விதைக்கிறார்கள்
அன்பெனும் செழுமை விதை
காற்றில் யாரோ அறுக்கிறார்கள்
முழுமையின் கனவு எல்லை

2 comments:

 1. "வறுமையில் பசித்திடும் போது
  தருவதற்கு யாருமில்லை"
  "தவித்திடும் இதயங்கள்
  உலகத்தில் பல உண்டு"
  அழகிய வரிகள் அர்த்தமுள்ள வரிகள்.

  ReplyDelete
 2. காற்றில் யாரோ செய்வன எல்லாம் என உவமைப்படுத்தி கவிதையை எழுதியிருப்பது ரசிக்க வைத்தது...

  ReplyDelete