அவள்

Posted by G J Thamilselvi On Thursday, 26 September 2013 1 comments
சிலரை பார்த்ததும் பிடித்துப்போகும்சிலரை ஏன் எதற்கு என்றே தெரியாமல் வெறுத்து போகும். அவளை பார்த்ததும் பிடித்து போனது. அழகான குமிழ் சிரிப்புகாதுகளில் எந்த காதணிகளும் இல்லை. கழுத்தில் மஞ்சல் சரடு. தூக்கி கோடு எடுக்காமல் வாரப்பட்ட தலை. கர்ப்பிணி பெண் நிறை மாதமாக இருக்க வேண்டும். உருண்டு திரண்டிருந்த வயிறு. பார்த்ததும் ஓடி போய் உதவ வேண்டும் என்றொரு உந்துதல். சோகத்தை மறைத்து தேடும் விழிகள். மிஞ்சி போனால் குத்து மதிப்பாக தோராயமாக எப்படி தெரிவு செய்தாலும் வயது 17 தாண்டாது.


குழந்தை முகம்முகத்தையும் வயிற்றையும் ஒரு சேர பார்த்தால் முரண்பாடுகளின் உச்சத்தின் பிறப்பிடம் அவளாக தான் தோன்றியது எனக்கு.

அக்கா ஒட்டர் ஐடி ல பேர் சேர்க்கனும்
என்ன வயசும்மா உனக்கு?
18 முடிஞ்சது என்று ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தாள்அந்த சிரிப்பிற்குள் ஒரு பொய் ஒளிந்து கிடந்தது.
என்னுடைய அடுத்த அஸ்திவாரம் எந்த வருடம் பொறந்தம்மா?
கொஞ்சம் யோசனை சொல்லலாமா வேண்டாமாஎன்ற கேள்வியின் தொக்கல் விழிகளில்.
எதுக்காக ஓட்டர் ஐடி வேணும் உனக்குஉண்மை சொன்னாதான் நான் உனக்கு உதவ முடியுமான்னு தெரியும்என்றேன்.
கொஞ்சம் தயங்கி 1996 க்கா என்றாள்
“1995 வரைக்கும் தாம்பா ஓட்டர் ஐடி போட முடியும்
அக்கா ப்ளீஸ் போட்டு தாங்களேன்
ஏன் ?”
குழந்தை பொறந்தா பணம் வருதில்ல அதுக்கு தான்
வயிற்றின் பாரம் தாங்காமல் ஒடிந்து விழுந்துவிடுவாள் போலிருந்தது.
கர்ப்பிணி பெண் என்ற பரிதவிப்பும் கூடநாற்காலியில் அமர பணித்தேன்.

மெல்ல அமர்ந்தாள். அதை விட கொடுமை சுடிதாரில் வயிற்றை தள்ளியபடி பார்த்த போது வயிற்றில் தலையணை கட்டி விளையாடுகிறாளோ என்றொரு நினைவு வந்து மறு கணமே கலைந்து போனது.

இந்த தண்ணி குடிஎன்று வாட்டர் பாட்டிலை நீட்டினேன்

தேங்க்ஸ்க்கா என்றவள்தண்ணீரை கட கடவென்று வாயில்சரித்துக்கொண்டாள். அது க்ளக் க்ளக் என்று சப்தம் எழுப்பியபடி மறைந்துக்கொண்டிருந்தது.

நாக்கெல்லாம் வரண்டு போச்சாநானே தண்ணி கேக்கணும்னு நெனச்சேன் என்றாள்.

கோபம் வந்தது எனக்குஅவளை பெற்றவர்கள் மீது ஏன் இவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்து  வைக்க வேண்டும். அவளை கட்டிக்கொண்டவன் மீது...ஒரு வேளை காதல் திருமணமோ என்று எழுந்த எண்ணத்தை எனக்குள் புதைக்காமல் கேட்கவும் செய்தேன்.

லவ் பண்ணி கட்டிக்கிட்டியா

அய்யே இல்லக்கா எங்கக்கா சீக்கு வந்து செத்துட்டாளா,அவளுக்கு ரெண்டு குழந்தையாச்சாஅவங்களபாத்துக்கனும்னு எங்க மாமனுக்கே என்ன ரெண்டாந்தரமா கெட்டிவச்சிட்டாங்கா

அந்த குழந்தைய நீ தான் பார்த்துக்க வேணுமாஇப்ப யார்கிட்ட விட்டுட்டு வந்த
அம்மா தான் பாத்துக்குறாங்க
நான் கேட்காமலே அவள் சொன்னாள்,
எங்க அக்காவும் மாமாவும் லவ் பண்ணி தான் கெட்டிக்கிட்டாங்க
ம் விழியகட்டி பார்த்தேன்
எங்கக்கா செத்த மூணாவது மாசமே எங்கமாமா என்னையகெட்டிக்கிட்டார்

இப்போது எனக்கு அதிர்ந்து உடைந்தது உள்ளத்தின் ஆழத்தில் ஏதோ ஒன்று. இனம் புரியா பிசைதல் வலி.

அப்பொழுது உள்ளே வந்தான் ஒரு சிறுவன் கூடவே இரண்டு சிறுமிகள். சீருடை அரசாங்க பள்ளிகூட மாணவிகள் என்பதை பறைச்சாற்றியது.
என் ப்ரண்ட்சுக்கா நான் போகவா என்று அவள் வினவ
ம் என்று தலையாட்டினேன்

நீ காதலித்தாயாஅந்த பையன் உன் காதலனா என்று கேட்க வந்து புத்தியை ரெண்டு குட்டு வைத்துக்கொண்டேன். என் ப்ரண்ட்ஸ் என்று அவள் சொன்ன பிறகு அதை வேறுகோணத்தில் யோசிப்பது அபத்தமாக பட்டது எனக்கு.

அவள் போகும் முன் வயிற்றிலிருந்து ஒரு தலையணை எடுத்து வெளியே எறிந்து சிறுமியின் உற்சாகத்தோடு குதித்தாட மாட்டாளாஎன்றொரு ஏக்கம் பிறந்தது எனக்குள்.


அவளுக்கு உதவ முடியவில்லையே என்ற வருத்தம் மனதின் ஆழத்தில் 
நெருடிக்கொண்டே இருக்கிறது இன்று வரை.

1 comment:

  1. மனதைத்தொட்ட சம்பவம்... இதுபோல இன்னும் இந்த சமூகத்தில் நடந்துகொண்டேதான் இருக்கிறது... எல்லாம் அறியாமையால் நடக்கும் தவறுகளா?... இல்லை தெரிந்தே செய்கிறார்களா?... என்பதுதான் புரிவதில்லை

    ReplyDelete