வயிற்றெரிச்சல்

Posted by G J Thamilselvi On Sunday, 1 September 2013 2 comments
என் கண்ணு முன்னாடி நிக்காத வயத்தெரிச்சலா வருது ன்னான் அவன், ஏன்னு தான் புரியல மனசு கெடந்து அடிச்சுகிச்சு, எதுக்காக எம்மவ அப்படி சொன்னான்னு.

சின்ன கொலந்தையா இருக்க சொல்லோ, யம்மா யம்மான்னு அயுவான், நான் இல்லினா சோறு துன்னமாட்டான் இன்னா பண்றத்து சொல்லு.


உள்ள மருமொவ குண்டான் தேய்க்குற சத்தம், ஏதாச்சும் சண்டையாக்கும்ன்னு மனச தேத்திக்கின.

வாய்பேச்சு அடங்கி போச்சி, யாருமே கீராறங்க கேக்குறதுக்கு

மவன் பெத்தது இதுக்கும் அதுக்கும் ஓடுதுக டீ கொலந்த ஒரு வா தண்ணி கொண்டான்னா ஒண்ணுத்து காதுலயும் விழுகுல, இந்த கசமாலத்துங்களுக்கு சத்து கம்மி, என்னத்த திங்குதுங்க எங்க காலம் மாதிரி கம்பும் கேவுருமா கொட்டிக்கிடக்குது.

இன்னாமோ ரோசனை பண்ணிப்பாத்தேன் ஒன்னும் விளங்கல, தட்டு தடுமாறி எங்குட்டாவது கொளங்குட்டையில அஸ்தமிச்சுக்கலாம்ன்னு பாத்த குடிக்குற நிலம் பாழாச்சுன்னா


அதுக்குதான் இப்பிடி பிராக்கா பிச்சை எடுக்காலம்னு கிளம்பிக்கினேன்னு சொன்னவளை பார்த்தபோது வயிற்றெரிச்சலாக வந்தது.

2 comments:

 1. வணக்கம் சகோதரி....

  தங்களை இன்றைய வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...
  நேரம் கிடைக்கும் போது கீழே உள்ள இணைப்பின் வழியாக சென்று பாருங்கள்...

  http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_4216.html

  நன்றி.

  ReplyDelete
 2. உயிரை உருக்கும் வருணனை!...வாழ்த்துக்கள்!

  ReplyDelete