கைவிடப்பட்ட வியாபாரம் - Facebook - வாசிப்பனுபவம்

Posted by G J Thamilselvi On Friday, 9 August 2013 6 comments
" அப்பா ஏதாச்சும் வாங்கு வாப்பா "
தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த என்னை கைப்பிடித்து இழுத்தாள் மகள் .
என்னடா வாங்குறது ?
அங்க பாருங்க பொம்மை கடை வச்சிருக்கேன் என்றாள் .
இழுத்து சென்று காட்டினாள் தான் வைத்திருந்த பொம்மை கடைய .

சரி அம்மாவை வரச்சொல்லி வாங்க சொல் என்று சொல்லி விலகப் முயன்றவனை விடவில்லை .
நீதாம்ப்பா வாங்கனும் உங்கிட்டதான் பணமிருக்கு என்றாள் .
நான் வாங்கி
யாருக்கு கொடுப்பது என்றேன் .

ஒரு கணம் யோசித்தவள் கண்கள் மலரச் சொன்னாள்
உங்க பாப்பாவுக்கு குடுங்க என்று .
சரி என்ன விலை என்றேன்
எது வேண்டும் எனறு கேட்டவளிடம் அனைத்தும் வேண்டும்
என் பாப்பாவுக்கு என்றேன் .

திடுக்கிட்டவள் விரல் விட்டு என்ன கணக்கு போட்டாளென்று தெரியவில்லை .
ஐந்து ரூபாய் என்றாள்
இல்லாத சட்டைப்பைக்குள் கைவிட்டு இல்லாத ஐந்து ரூபாயை நீட்டினேன் .
வாங்கிக்கொண்டு ஐந்து ரூபாய்க்கு ஐந்து ரூபாய் போக மீதியும் கொடுத்தாள் .
பொம்மைகளை அள்ளி ஓரம் சேர்த்து அவள் முகம் பார்த்தேன் . காலியாகியிருந்த கடை திருப்தி தரவில்லை அவளுக்கு .
மீண்டும் பொம்மைகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தவள் சொன்னாள் நீங்க வேண்டாம் போங்க நான் அம்மாகிட்ட வித்துக்கறேனென்று .
என்னுடைய பணத்தை கொடு என்று நான் கேட்கவில்லை
அவள் கொடுத்த மீதிப் பணத்தை கேட்கத் தெரியாது அவளுக்கு .

என்னுடைய ஐந்து ரூபாய் அவளிடம் இருக்க அவளுடைய ஐந்து ரூபாய் என்னிடமிருக்க அன்பின் காரணமாக பரஸ்பரம் கைவிடப்பட்டது அந்த வியாபாரம்.

எழுதியவர்: திரு.ராசு
பல்லடம்

6 comments:

 1. என்னுடைய ஐந்து ரூபாய் அவளிடம் இருக்க அவளுடைய ஐந்து ரூபாய் என்னிடமிருக்க அன்பின் காரணமாக பரஸ்பரம் கைவிடப்பட்டது அந்த வியாபாரம்.

  அழகான பொம்மை வியாபரம் ..!

  ReplyDelete
 2. அழகான காட்சி விவரிப்பு! அருமை! நன்றி!

  ReplyDelete
 3. We would like to inform you that auto publishing post at Bloggiri has been stopped. But it's very easy to show your post at Bloggiri.com. You just need to click on the Bloggiri logo at your blog, whenever you will publish a new blog post. It will automatically publish your post on Bloggiri.com

  Click here for more informations:
  How to register a blog & publish post at Bloggiri?

  Regards
  Team Bloggiri

  ReplyDelete