சிறகடிக்கும் தேவதை...!!! -Face book -வாசிப்பனுபவம்

Posted by G J Thamilselvi On Friday, 9 August 2013 0 comments
இன்று தேவதைக் கதை 
சொல்லச் சொன்னாள் 
தூங்கும் நேரத்தில் கடைக் குட்டி 
கண்கள் விரித்து சிறகு விரித்த 
தேவதைகளை உள்வாங்கிக் கொண்டே 
தாழிடப்பட்டிருந்த கதவை 
அடிக்கொருமுறை பார்த்து பின் 
கதையில் மூழ்கினாள் .

கதையின் போக்கிலேயே 
தேவதைகளுடன் உறங்கிப் போனாள் .

நேற்றிரவு அவளின் கனவில் 
பிரம்புடன் வந்திருந்தார் ஆசிரியை 
என்று மூத்தவள் சொல்லி தெரிந்தது . 

இன்று சிறகுகள் கொண்ட 
தேவதைகளுடன் 
சிறகுகள் கொண்ட தேவதையாக 
மிதந்து கொண்டிருக்கும் 
யாராவது ஒருவரின் கதை சொல்லலில் 
தேவதையாக கலந்திருப்பாள் . 

இன்று வரும் ஆசிரியை 
ஏமாற்றத்துடன் செல்ல வேண்டியது தான் 
தாழிடப்பட்டுள்ள அறைக்குள் 
அவளில்லாததைக் கண்டு ....

                                         எழுதியவர்: ராசு
                                         பல்லடம்


இந்த கவிதையை நான் எழுதவில்லை. வாசித்ததில் தொட்டு சென்றது ஒரு புள்ளியாக இதயத்தின் ஆழத்தை இது பேஸ்புக்கில் நண்பர் ராசு ராசு என்பவரால் பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு படமும் தலைப்பும் எங்கைங்காரியம். என் வாசிப்பனுபவத்தை அழியாமல் அடைகாக்கும் பொருட்டாக எழுத எண்ணியுள்ளேன். பேஸ்புககில் என் வாசிப்பனுபவங்களை பற்றி.

0 comments:

Post a Comment