ஒரு பார்வை தா...!!

Posted by G J Thamilselvi On Friday, 9 August 2013 2 comments
சின்ன எதிர்பார்ப்பு தான்
இன்றாவது உன்னை
கண்டுவிட 


உன்னிடமிருந்து
வந்துவிடும் குறுஞ்செய்தியில்
உயிர்த்துவிட

கருத்துக்களை சிதையில்
ஏற்றி நெருப்பிட்டு
அன்பினில் குளி்ர்காய

வரட்டு பிடிவாதத்தை
ஒத்தி வைத்து
சிருங்கார கதை பேச

என்ன செய்ய
உணர்வுகளை உள்ளடக்கி
தவிக்கிறது இதயம்

தவிக்கின்ற உணர்விற்கு
நீராகவேணும

ஒரு பார்வை தா...!

2 comments:

  1. அருமை! அழகான வார்த்தைகள்! சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  2. என்ன செய்ய
    உணர்வுகளை உள்ளடக்கி
    தவிக்கிறது இதயம்

    ReplyDelete