நானும் அனாதை என்று...!

Posted by G J Thamilselvi On Thursday, 8 August 2013 3 comments
அன்பற்ற வக்கிர உடல்களின் ஒருங்கிணைப்பால்
உருவாக்கப்பட்டு தனித்துவிடப்படுகிறேன் நான்
உணர்ச்சி கொந்தளிப்பில் கொதித்து கலந்த பின்
என் உணர்வுகள் கசக்கியெறிப்படுகிறது அவர்களால்


பெற்றோர் என்ற வார்த்தையை
என் இதய அகராதியில் நின்று
அழுத்தமாக அழித்து பார்க்கிறேன்
அழியேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறது அது

நான் குழந்தை என்பதை மறந்து போகிறது
இந்த அற்புத சமூகம்
மழலையின் தனிமைக்கும்
மறக்கப்பட்ட சிரிப்பிற்கும் பின்
உருவகம் ஏற்றி பிசாசாக்கி பார்க்கிறது
பிஞ்சான என் உள்ளத்தில் நஞ்சை விதைத்து

நின்று ரசிக்கிறேன்
நிகழும் நிகழ்வுகளை அனுதினபொழுதிலும்
பிச்சையாக என் கைகள் விழும் உலோகத்திலும்
அன்பற்று விலகும் மனித்த்திலும் நின்று
சிரிக்கிறது இயற்கை நானும் அனாதை என்று

கொடுக்கப்படாத அன்பின் நிமித்தம்
என்னை குற்றவாளியாக்கி பின்பு
என்றோ ஒரு நாள் கோஷம் எழுப்பக்கூடும்
இந்த சமூகம் இவன்(ள்) வக்கிரம் பிடித்தவன்(ள்) என்று.
கொடுக்கப்பட்டதே பெறப்படுகிறது என்று அறியாமல்

3 comments:

 1. வலி மிகுந்த கவிதை வக்கிரன் எங்கனம் உருவாகிறான் என்பதற்கான அருமை விளக்கம்....

  ReplyDelete
 2. //கொடுக்கப்பட்டதே பெறப்படுகிறது என்று அறியாமல்//

  பொட்டில் அடிக்கிற மாதிரிச் சொல்லிட்டீங்க!i

  ReplyDelete
 3. அவர்கள் இப்படி ஆவதற்கு சமுகத்தின் (நாம் )பங்கு மிக முக்கியமானது !

  ReplyDelete