எங்கிருந்தாய் நீ...?

Posted by G J Thamilselvi On Tuesday, 6 August 2013 3 comments
கூடுவிட்டெழும்பும் வண்ணாத்தி போல
வீரிட்டெழும்பும் என் உணர்வே எங்கிருந்தாய்...?

அவன் கீறி சென்ற பின்பும் அன்பை ஊற்றி தர
காதல் ஆழத்தினை எங்கே கற்றாய்...?


மெல்லிய பெண்மைக்குள் கண்ணீரை கவிதைக்குள்
புதைத்திடும் லீலைகள் நன்றே செய்தாய்...!

வரி வடிவத்தை நேசித்து வார்த்தைகள் சுவாசித்து
இதயத்தில் பதித்திட சேவை செய்தாய்...!

அவன் தோள் சாய ஏங்கியும் மடி தாங்க வேண்டியும்
வலி தாங்கும் இதயத்தை மறைத்து வைத்தாய்...!

என் உணர்வே பெண் உணர்வே
இத்தனை காலம் எங்கிருந்தாய்...?

ஆண் வலி தரும் வலியன் என அறிந்தும் கூட
ஏனடி அவன் பின் சிறகடித்தாய்...?

3 comments: