மாமரக்குயிலே...!

Posted by G J Thamilselvi On Tuesday, 27 August 2013 3 comments
மாமரக்குயிலே மாமரக்குயிலே
உன் சோக கீதம் கேட்டு வந்தேன் மாமரக்குயிலே
அந்த ராகம் நெஞ்சில் உவர் நீர் கொடுத்தது மாமரக்குயிலே
மாமரக்குயிலே மாமரக்குயிலே
சோகம் என்னத்துக்கோ மனம் தாங்க வலி இல்லை


தென்றல் இசை சீழ்க்கையிலே தனித்து நீ இசைப்பதென்ன
நெஞ்சம் அந்த இசையினிலே அமிழ்ந்து இறப்பதென்ன
என்னவன் போல் உன் நாதன் விலகி சென்றானா?
என்னவள் நீ இல்லை என்றே வெறுத்தானா?
சேதி என்னடி என்னடி மாமரக்குயிலே
சொல்லி சோகம் தீரடி மாமரக்குயிலே
மாமரக்குயிலே மாமரக்குயிலே
பாடல் இசைப்பதின் சங்கதி என்னடி

அன்றொரு நாள் நானும் கூட தனித்தே தவித்திருந்தேன்
மெல்ல ஒரு சேதி சொன்னான் இல்லை அவள் நீயே என்று
கண்கசக்க இரங்கவில்லை, கண்ணீரில் இளகவில்லை
வலியவள் இல்லை என்று முகத்தை திருப்பிக்கொண்டான்
வலிமை என்ன என்று எனக்குள் கேட்டு வைத்தேன்
துணிச்சல் என்றதொரு விடையும் கிடைக்க கண்டேன்
கற்பாறை உணர்வெடுத்து என்னை வடித்துக்கொண்டேன்
காதல் பிரித்தெடுத்து வெம்மையில் விதைத்து வைத்தேன்
இறக்க மறுத்திங்கு உயிர்த்தது தினம் தினமும்
பாலையாய் வெடித்தது அந்த மென்மை மலர்ச்செண்டும்

மாமரக்குயிலே மாமரக்குயிலே
உன் காதல் சொல்லடியே மாமரக்குயிலே
உன்னவன் நேசம் என்ன உங்களின் பகிர்தல் என்ன
ஊடல் கொண்டு இசைத்தாயோ? பிரியின் துயரம் என்ன
மீண்டும் அவன் வந்து நிற்பான் அணைத்து துயர் தீர்ப்பான்
தேகபிரிதலின்றி மனதில் ஒன்றி இருப்பான்
மகிழ்ந்து இசைத்திடு மாம்மரக்குயிலே
என்னவனை போல் உன் நாதன் இல்லையடி
பெண் இவளை போல் நீ கோழை இல்லையடி.

3 comments:

  1. மாமரக்குயில் சோகத்தை தீர்க்கட்டும்

    ReplyDelete
  2. மாமரக் குயிலின் இன்னிசை ராகம்...

    ReplyDelete
  3. மாமரக்குயில் சோகத்தினைத் தீர்க்கும்

    ReplyDelete