மௌனித்து சொல்கிறோம்

Posted by G J Thamilselvi On Sunday, 4 August 2013 3 comments
ஒரு சின்ன சிணுங்கலில்
வார்த்தைகள் ஏதுமற்று
தவித்து போகிறேன்
மீண்டும் உன்னிடமிருந்து
இசைவான செய்தி ஒன்று
வரும் வரையில்

கற்பனைகளை குத்தகை கொள்ளும்
மாயவன் நீ
அதன் கருவில் கனிவை குழைக்க
உன்னால் மட்டுமே முடியும்

உன் அருகாமை பொழுதுகள் அத்தனையும்
இளவேனிற் இம்சைகளை இனிக்க தருக்கிறது
கொஞ்சும் கருப்பட்டியும் கெஞ்சும் பனங்கற்கண்டுமாய்
இதய நாவின் ருசியாகிறது தினமும்

உன் விழி என் முகம் பார்க்க
என் இதயமோ விழியகப்படுத்துகிறது பத்திரமாய்
விழிகளற்று பார்க்கும் வித்தை
நமக்குள் நிகழ்வதை வியந்து
உணர்வுகளை இரகசியப்படுத்துறோம்

மௌனமாக பேச நம்மால் மட்டுமே முடியும் என்று
மௌனித்து சொல்கிறோம்
வார்த்தை மேகங்கள் அற்ற மனவெளியில்
இருவர் ஒருவராகி இல்லாமையில் மூழ்கும்
காலப் பொழுதுகளில்

3 comments:

 1. மௌனத்தின் அர்த்தம் சொல்லும்
  அருமையான கவிதை
  மனம் கவர்ந்த படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வணக்கம்!

  மௌனப் பேச்சு
  எமக்கும் கேட்கிறது!

  வாழ்த்துக்கள்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete