பத்திரமாய் இரு...!

Posted by G J Thamilselvi On Saturday, 31 August 2013 3 comments
வாழ்க்கை பயணத்தின் 
உச்ச வரம்புகளை ஒற்றை 
வார்த்தை நிர்ணயித்தது
பத்திரமாய் இரு 
நலம் விரும்பியாய்
பத்திரப்படுத்தப்பட்ட 
வார்த்தையின் நிமித்தமே
காயப்படுகிறேன்


யாருடையது என்று தெரியாமல்
மகிழ்ச்சியை களைந்து
பத்திரமின்னை தோய்த்தெடுக்கப்படுகிறது
காடியின் புளிப்பாக

நேசத்தின் சாரலை
கானலுக்கு வார்த்ததின் நிமித்தம்
அன்பின் நிலம்
மீண்டும் பாலையாய் வெடித்து போகிறது.

என்றோ மழை பெய்ய கூடும்
மணல் நனையக்கூடும்
ஈரம் வரண்டு போகும் பாலையில்
மழை பொழிந்தால் என்ன ?
பொய்த்தால் தான் என்ன ?

3 comments:

 1. //யாருடையது என்று தெரியாமல்
  மகிழ்ச்சியை களைந்து
  பத்திரமின்னை தோய்த்தெடுக்கப்படுகிறது
  காடியின் புளிப்பாக
  //

  super lines

  ReplyDelete
 2. “ஈரம் வரண்டு போகும் பாலையில்//மழை பொழிந்தால் என்ன ?//பொய்த்தால் தான் என்ன ?” என்ற வரிகள் விரக்தியின் உச்சத்தையே தொடுகின்றன. கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்!

  ReplyDelete