மிச்சம் என்ன இருக்கு...?

Posted by G J Thamilselvi On Wednesday, 28 August 2013 1 comments
இல்லை என்று சொன்னேன்
காதல் வரவில்லை என்று சொன்னேன்
வந்த நொடி உண்மையின்றி
கள்ளம் வைத்து மறைத்தேன் கள்ளச்சிறுக்கி
அந்த கள்ளத்திற்குள் நேசத்தை
ஒளித்து வைத்தேன் பாச கிறுக்கி


கையோடு கை சேர்க்க
அஞ்சுவிரல் கெஞ்சி கெஞ்சி மறுகுதய்யா
உள்ளங்கை இணைப்பாக
உன்மத்தங்கள் நெஞ்சுக்குள்ளே நிரம்புதய்யா

காதல் இல்லை என்றேன்
உன்னை காணா நாட்களில் கண்டுகொண்டேன்
காதல் உண்டு என்பேன் – அதை நீ
ஏற்காது போனால் என்ன செய்வேன்

கொஞ்சம் முகம் பார்க்க தோன்றும்
கை சேர்க்க தூண்டும்
மெய் அணைக்க தூண்டும்
முழு மதி இரவும்

உன் விரல் கோத ஏங்கும்
தோள் சாய தேடும்
நெஞ்சில் முகம் புதைக்கும் நேரம்
காதல் தவமிருக்கும்

என்ன செய்ய நான்
என்னருகில் நீ
இதயத்தை தொட்ட பின்பு
மிச்சம் என்ன இருக்கு
இதழியல் படித்திட

ஆசைகள் துளிர்கிறது.

1 comment: