கனவென்று அறியவில்லை...!

Posted by G J Thamilselvi On Sunday, 25 August 2013 2 comments
சொல்ல ஒரு சேதி உண்டு
உன்னிடம் மட்டும் சொல்வதற்கென்று
இனிமை இன்றி இளமை இன்றி
இரவில் வந்த கனவு ஒன்று

கனவென்று அறியவில்லை
காலங்கள் அதற்கு உண்டு
காட்சி உண்டு நிறங்கள் உண்டு
உணர்வுகளின் தாக்கம் உண்டு

விழி இன்றி நான் பார்த்தேன்
மொழி இன்றி பேசி வந்தேன்
உடலின் உதவி இன்றி
நளினமுடன் நட(ன)ம் புரிந்தேன்

நினைத்த நொடி பொழுதில்
நினைத்த இடம் நானிருந்தேன்
வடித்த வடிவங்களை
செப்பனிட தனித்து நின்றேன்

குயவன் பானை போல
என் கையில் நீ இருந்தாய்
குழந்தை தாயை போல
உன்னை நான் பற்றியிருந்தேன்

நீ யாரோ நான் யாரோ
எனக்கு தெரியல
உறக்கம் கலைந்த போது
அந்த கனவில் உயிரில்ல

நினைவு தளத்தில் உந்தன் உருவம்
வெள்ளை காகிதமாய்
உணர்வு தளத்தின் உந்தன் உருவம்
பிள்ளை சிநேகிதமாய்

சொல்ல ஒரு சேதி உண்டு
உன்னிடம் மட்டும் சொல்வதற்கென்று
உறக்கம் கலைந்த போதும்
உந்தன் நினைவு கலையல

இசைக்கப்பட்ட உணர்வின் ராகம்
செவியில் விலகல
என்னவென்று கேட்டு வைத்தேன்
தாய்மை என்று சொல்லிச் சென்றாய்

கண்ட இடம் அத்தனையும்
தாயாக நானே நின்றேன்
ஒட்டு மொத்த உருவத்திலும்

சேயாக நீயே நின்றாய்.

2 comments:

 1. அறியவில்லை... தெரியவில்லை... புரியவில்லை...

  ReplyDelete
 2. விழி இன்றி நான் பார்த்தேன்
  மொழி இன்றி பேசி வந்தேன்
  உடலின் உதவி இன்றி
  நளினமுடன் நட(ன)ம் புரிந்தேன்

  அருமை அருமை

  ReplyDelete