காற்றில் கரைந்து போவோம்

Posted by G J Thamilselvi On Friday, 2 August 2013 2 comments
பேசிய நாட்கள் நெஞ்சத்தில் விழுந்து
பேச சொல்லுதே
இது பேசா வரமதின் காலம் என்று
உணர்வுகள் கொல்லுதே


வரிகளாய் என்னுள் விழுந்ததை எண்ணி
வரைந்து பார்த்தேனே உன் உருவம்
புருவ நெரிசலில் பாவை விழிகளுக்குள்
குளிர்ந்து போனதே நம் இதயம்

காற்றில் கரைந்து போகும் மௌனத்தோடு
தேகம் கரைந்து கலந்தோம்
மேக விரிப்பை மெத்தை ஆக்கி
உருவமின்றி லயித்தோம்

புள்ளிக்குள் அலைவீசும் புத்துயிராய்
பிணைந்திருந்தோம்
அலை கைகள் நீண்டதினால்
மறந்திங்கு மண்ணில் விழுந்தோம்

2 comments:

  1. நல்ல கற்பனையாய் காதல் கவிதை... ஒரு நிமிடம் உணர்ந்து ரசித்துப் படித்தேன்.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete