நமக்கு நாமே என்று...!

Posted by G J Thamilselvi On Friday, 16 August 2013 1 comments

கவிதைக்கு பொய் அழகாம்....பொய் கலக்கா காட்சியின் வடிவம் இங்கே எனக்கு தெரிந்த வரை அழகு படுத்தப்பட்ட வார்த்தைகளில் கண் கண்டதும் இதயத்தின் வலிகளை அறிவித்தபடி....................................................................கவிதைக்கும் படத்துக்கும் தொடர்பில்லைங்க இந்த கவிதைக்காக படம் தேடிய போது கிடைத்தது என்பதை தவிர.

கொட்டும் மழையின் சில்லிப்பு கூடத்தில்
கிட்டி கிடுகிடுக்கும் பற்களின் தாளத்தில்
நடுங்கி துணை தேடும் அணுக்களின் நடுக்கத்தில்
தனித்து நான் நின்ற வேளை

நீரோடும் சாலை கடந்து
நீர் தேடி பைய நடந்து
நனைந்தாடும் சேலை குடையாக
நீர் ஏந்தி சென்றாள் முதிர் அன்னை ஒருத்தி

எத்தனை ஈன்றாளோ
உடல் வலி பொறுத்து
பிள்ளையும் பெண்டுமாக
வாழை கன்றென நினைத்து

சின்ன குடில் ஒன்றில்
கடவுளென்று கல்பதித்த
கோயில் வீட்டில் தனித்து நின்றாள்
குருதி பால் கொடுத்த
உயிர்கொண்ட மாரியாத்தா

மழையோ தனிந்திருக்க
தனித்து நான் கடந்தபோது
இதயத்தில் உதயம் பெற்றேன்
எத்தனை பெற்றிடினும்
உற்றவர் சுற்றிடினும்
உற்றத்துணை நமக்கு நாமே என்று

1 comment:

  1. "எத்தனை பெற்றிடினும்
    உற்றவர் சுற்றிடினும்
    உற்றத்துணை நமக்கு நாமே "

    அருமையான கருத்து அழகிய வரிகளில்

    ReplyDelete