நேசித்தல் பொருட்டு

Posted by G J Thamilselvi On Thursday, 15 August 2013 2 comments
ஆழமான அன்பின் நிமித்தம்
உன்னோடு நானும் என்னோடு நீயும்
பேசாதிருக்க முடியாது என்று
பகிரங்கித்துக்கொண்ட நாளை
நினைந்து தவித்தேன்

இன்றோ நாளையோ
நீ பேசிவிடக்கூடும் என்று நானும்
அதையே எதிர்பார்ப்பாக்கி நீயும்
பேசாதிருக்க……………….
கனத்த மௌனத்தோடு
எண்ணங்களை அசைப்போட்டபடி
கடந்து போகிறது காலம்

தயக்கத்தை உடைத்து
இருவருமாய் எதிர்நிற்க கூடும்
அன்பின் நிமித்தம்
எந்த வரையறைகளும் இல்லாமல்

நேசித்தல் பொருட்டு.

2 comments:

 1. உணர்வுகளும்
  உணர்வுகளின் நிமித்தமும்..
  சத்தமின்றி
  அன்பாய் நேசமாய்
  உருமாறி விடும்...

  அருமையான கவிதை...
  கவி வடிவம் மிக அருமை...

  ReplyDelete