என் உயிரானவரே...!

Posted by G J Thamilselvi On Thursday, 1 August 2013 1 comments
திடங்கொண்டு போராடு போட்டிக்காக என்னால் எழுதப்பட்ட இரண்டாவது காதல் கடிதம் இது. இதன் அளவு சிறியதாக இருப்பதால், இந்த கடித்த்தால் போட்டியில் பங்குபெற இயலவில்லை. போட்டியில் பங்கு பெற இயலாவிட்டாலும் இந்த கடிதம் உணர்வுகளின் குட்டி இளவரசி. மீண்டும் எழுத வரும் போது இந்த கடித்த்தை பதிவிடுவதாக நண்பர்களிடம் தெரிவித்திருந்தேன். மீண்டும் எழுதவென மீண்டு வந்துவிட்டதால் பதிவிடுகிறேன் இப்போது. 

இரண்டாவதாக எழுதப்பட்ட காதல் கடிதம்.

என் உயிரானவரே...!

     எப்பொழுது வருவீர்கள்பயணித்த களைப்பு தீரும் முன்னே திரும்பிவிடுங்கள்கதவடைத்த சன்னல்களும்உட்புறம் தாழிட்ட கதவும்,நீங்கள் இல்லை என்று பொய் சொல்லுகிறது என்னிடத்தில்.

     இதயத்தின் இரகசிய அறையில் ரம்மிய காதலுடன் தளும்பும் தங்களின் புன்னகை முகத்தை அவர்களிடம் காண்பிக்கவில்லை நான். விழிவிளிம்பில் வழியும் நீர் மேற்கூறையில் உங்கள் முக பிம்பம் கண்டுமகிழ்ச்சியின் பன்னீர் மலர்களை மாலையாக்குகிறது இருபுறமும்.

     இறுக்கத்தில் இடைபுகுந்த காற்றின் இளஞ்சூட்டில்தங்களின் மூச்சுக்காற்றோ என்று மகிழ்ந்து திரும்புகிறேன் நான். அங்கு வெற்றிடம் கண்டு வெந்து போகிறது மனது. இடப்பட்ட நெற்றி முத்தம் ஒன்று நினைவில் அரும்ப மகிழ்ந்து பின் கூம்புகிறது இதயம்.

     வியர்வை மணக்கும் தங்களின் சட்டையை அணைத்தபடி வாயிற் பார்க்கிறேன் நான். எந்த நேரமும் நீங்கள் வந்துவிடக்கூடும். வெந்நீர் கொதித்து நீரூ பூத்தது. குதித்து நடம் புரிந்து வெறி ஏற்றுகிறது. அதன் ஏளனம் அடக்கவாவது வந்துவிடுங்கள் சீக்கிரம்.

     தட்டென்று வைக்கப்பட்ட பாத்திரத்தில் அடிப்பட்டு தரைநோகிறதென்று முகம் திருப்புகிறது. காகம் கரைந்ததில் கதவை திறந்து வைத்திருக்கிறேன் நான். என் இதய காவலனை வரவேற்கவென்று என் கூந்தல் மலர்கள் வாசற்கோலத்தில் தவங்கிடக்கிறது.

     மஞ்சள் முகம் தழுவிகுங்குமத்தில் சிரிக்கிறது என் காதல். விழிகள் மையிட்டு ஏக்கமும் நேசமுமாய் வசீகரிக்க தவிக்கிறது தங்களை.

     கொல்லை புற தென்றல்தங்கள் அருகாமை பொழுதை நினைவுட்ட வெட்கத்தில் கோலம் போடுகிறது கட்டைவிரல். கொஞ்சம் சிரிப்புகொஞ்சும் கண்ணீர்கொஞ்சம் ஏக்கம்கொன்று போடும் எதிர்பார்ப்புமாக நகருகிறது நாழிகை.

   உங்களை பார்க்கும் அந்த நாழிகை என்ன செய்வேன். அழுவேனா?ஓடிவந்து அணைத்துக்கொள்வேனாமுகம் முழுவதும் முத்தங்கள் கொட்டி வெட்கம் துறப்பேனாபிரிவு தந்த துயரில் அழுந்த பதித்த முத்தம் தங்களை வலிக்க செய்யுமோ...?
       வேண்டாம் வேண்டாம் என் வருத்தங்கள் என்னுள் புதைந்து போகட்டும்.

      என்னை பார்க்கும் அந்த நாள் நீங்கள் என்ன செய்வீர்கள். இறுக அணைத்துக்கொள்வீர்களாவிழிநீர் துடைத்து கருவிழிக்குள் முத்தம் வைப்பீர்களாஎன் இதழ்களின் துடிப்படக்ககருஞ்சிவப்பு அதரங்களால் போர்தொடுப்பீர்களாஅழுகையும்ஆரத்தழுவலும்இளஞ்சூடுவியர்வையும்,காற்றிடைபுகா தழுவலுமாககாதல் தவிப்பில் உயிர்க்குமாஅந்த நாழிகைகள்.

     என் இளைப்பாறுதலுக்கு இதமாக உங்கள் நெஞ்சம் தயாராகுமா?உங்கள் விரல்கள் என் கூந்தல் கோதுமாமுத்தங்கள் வஞ்சனையில்லாமல் பரிமாறப்படுமாஎன்னவளே என்று இதயம் அரற்றுமாஇதழ்கள் காதில் கிசுகிசுக்குமாமீசையின் கிச்சுக்கிச்சு மூட்டுதலில்தேகம் சிலிர்த்தெழுமா?

      இத்தனை வினாக்களுக்குள்ளும் நகராது நிற்கிறது நாழிகைகள். ஒவ்வொரு நொடியும் யுகமாய் நீள்கிறது. என் வேதனை பொறுக்காமல் நிலவு மேக முந்தாணையால் முகம் மறைத்து அழுகிறது. தழுவ வந்த காற்றும் தழுவாமல் கடந்து போகிறது. விண்மீன் கூட்டங்கள் கண்செய்கையால் தேற்றமுடியாமல் பரிதவிக்கிறது. அண்டசராசரங்களுக்கும் தெரிந்திருக்கிறதுஎன் உயிரான நீங்கள் இல்லாமல்தேகம் குலைந்து போகும் அணு அணுவாய் என்று.

         என் அலங்காரங்கள் அழிந்து கலைந்த கூந்தலில் கவலை தொற்றகிறது. கண்ணீர் காய்ந்து தண்ணீர் அற்ற ஆறு போல் உப்புப்பாலங்களால் வெடித்துப்போகிறது கன்னம்.  எச்சில் வற்றி இதழ்களில் புன் நோகிறது. நான் வேதனை வெடித்து கதறும் முன் வந்துவிடுங்கள் என்னவரே.

                                                  என்றும் நேசமுடன்
                                                        மித்ரா

பின்குறிப்பு- மித்ரா என்றால் இனிமையானவள் என்றார்கள்.

1 comment: