நான் கவிதை ஆனேன்

Posted by G J Thamilselvi On Thursday, 1 August 2013 4 comments
இதயத்தில் விழுந்த நினைவொன்றில்
நான் கவிதை ஆனேன்


காதல் உணர் பொருளின்
கருபொருளாய் நீ வந்தபோது
நாமாகினேன்

உன் பார்வை வீச்சில்
வெட்க தூரிகைகளால்
முகம் சிவந்தேன்

நீ பேசும் மொழி
ஒவ்வொன்றிலும் நான்
காதல் புணர்ந்தேன்

உன் இதழ்கள்
கன்னம் தொட
உயிர் வரை ஆசித்தேன்

உள் அன்பின்
உன்மத்தங்களை
உணர்பொருளாய் நேசித்தேன்

நீ முன் நின்ற போதோ
வெட்க பூக்களை
தரைவிரிக்கிறேன்

நீ மென் உடல் ஏந்த
ஏங்கும் மனதின் எதிர்பார்ப்புகளை
உள்ளடக்கி தவிக்கிறேன்

ஏந்திய போதோ சிலிர்க்கிறேன்
உனை காண ஏங்கும் விழிகளை
நிலம் தாழ்த்தி

4 comments:

 1. மென்மையான படைப்பு .. சில வரிகள் காட்சியாய் விரிகின்றன ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அரசன் சே

   Delete
 2. ரசித்தேன்...

  உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

  ReplyDelete
 3. நன்றி அய்யா தொடர்புகொள்கிறேன்

  ReplyDelete