உள்முகம் திரும்பு

Posted by G J Thamilselvi On Saturday, 27 July 2013 8 comments
என்ன இது மாற்றம் எந்தன் உள்ளே
உள்ளம் அது தவிக்கிறது
வாழ்க்கை எந்தன் நெஞ்சுக்குள்ளே
கைகொட்டி சிரிக்கிறது

காணுகின்ற காட்சி இதுவெல்லாம்
மாயை என்று புரிகிறது.
மனதின் இரு எண்ண இடைவெளியில்
வெற்றிடம் விரிகிறது.

காணுகின்ற பிம்பம் அனைத்திலுமே
எந்தன் முகம் தெரிகிறது
காட்சி தரும் மலர்களின் மையத்தில்
எந்தன் இதழ் சிரிக்கிறது

மழைத்துளி மண்ணில் விழுமுன்னே
நெஞ்சத்தை நனைக்கிறது
துளிகளின் ஈரம் என்னுள்ளே
உணர்வாக கலக்கிறது

உணர்வுகள் பிரித்தாள
விழிப்புணர்வு வேண்டும் என்றேன்
உனக்குள்ளே இருக்கிதே
உள்முகம் திரும்பு என்றாய்.

8 comments:

 1. துளிகளின் ஈரத்தை ரசித்தேன்...

  உள்முகம் திரும்பு... அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. எல்லாம் நமக்குள்ளே அழகா சொன்னீங்க அக்கா.

  ReplyDelete
 3. அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் சகோ

   Delete