இலவசமாக வழங்கப்படவேண்டியது கல்வி மட்டுமே...

Posted by G J Thamilselvi On Sunday, 9 June 2013 2 comments
நமது அரசாங்கம் பல இலவசங்களை நமக்கு தருகிறது என்பது உண்மை தான்
அது குழந்தை பிறப்பில் இருந்து பொங்கல் வைப்பதிலிருந்து சுடுகாடு போகிற வரைக்கும் இலவசங்களை கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுத்து வருகிறது. என் கருத்தில் அரசாங்கம் நமக்கு கொடுக்கவேண்டிய வெகுமதியான இலவசம் கல்வி மட்டுமே அது நம் மக்களுக்கு புரிவதில்லை.


நாம் எப்போதும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களாகவும், கண்டிப்பவர்களாகவும் இராமல் நமது தேவையும் நம் அருகில் உள்ளவர்களின் தேவையையும் நிவர்த்தி செய்துக்கொள்ள நம்மால் ஆன செயல்களை செய்துக்கொள்ளவேண்டும். நான் அருகில் உள்ளவர்களின் தனிப்பட்ட
தேவைகளை குறித்து சொல்லவில்லை. கல்வி மற்றும் நமது சுற்றுபுற சுழல் குறித்தான  விழிப்புணர் பற்றி மட்டுமே இவ்விடத்தில் பேசுகிறேன்.

ஒரு மனிதனுக்கு கல்வியையும் நல்ல புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்திவிட்டோமானால் அவர்கள் குறித்து கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. கல்வி என்று இவ்விடத்தில் நான் பேசுவது பணத்தை உருவாக்கும் மனப்பாடம் செய்து காகிதத்தில் கக்கும் முறையை அல்ல. நான் நாய்களிடம் ஒரு குணத்தை கண்டதுண்டு, தின்றதை ஜீரணம் செய்யாமல் அப்படியே கக்கிவிடும். இன்றைய கல்வி முறையும் அத்தகையதே. மனனம் செய்து கக்கிவிடுறார்கள். மனதளவில் அதை கிரகித்துக்கொள்ளும் சக்தி
இன்றைய குழந்தைகளுக்கு இருக்கவி்ல்லை

நான் படித்த செய்திகளில் விருப்பமானது மற்றும், வியந்தது விகடனில் வெளியிடப்பட்ட குக்கிராமத்தில் ஒரு கல்வி புரட்சி. அந்த ஆசிரியர்கள் இருவரை பாராட்டி தீரவேண்டும். என்ற ஆவல் ஏற்பட்டதும் அல்லாமல், அரசாங்கம் அங்காங்கே மது கடைகள் திறப்பதை விட்டுவிட்டு இலவசங்களை தடைசெய்து அந்த பணத்தை கல்விக்காக செலவு செய்வதிலும் தரமான குழந்தை செல்வங்களை உருவாக்குவதிலும் கருத்து வைத்தால் நன்றாக இருக்கும்.

இலவசங்களையும் மது கடைகளையும் திறந்து மனிதனை அழிப்பதை விட்டுவிட்டு சமுதாய முன்னேற்றத்திற்கான அடிப்படையில் கருத்து வைக்கலாம். மது கடை இன்றி அரசாங்கத்தை நடத்த முடியாதெனில் பின்வரும் அரசாங்க தலைவர்கள் ஆள மக்கள் இருக்க
மாட்டார்கள் என்பது நிச்சயமான முடிவு ஆகும்.

விகடனில் வந்த செய்தியின் இணைப்பை இங்கு தந்துள்ளேன் படித்து பாராட்டிக்கொள்ளுங்கள். இவர்கள் முன் மாதிரிகள், இவர்கள் போன்ற ஆசிரியைகள் உருவாக வேண்டும் என்பது 
என் கனவு.

http://kalvi.vikatan.com/index.php?aid=1757#cmt241

2 comments:

  1. கோவை மாவட்டம், ஜடயம்பாளையம் ஊராட்சி - ராமாம்பாளையம் கிராமத்து பள்ளிபோல் ஒவ்வொரு பள்ளியும் இருந்து விட்டால்.ஏககப் பெருமூச்சுதான் மிஞ்சுகிறது.

    ReplyDelete
  2. இந்தப் பள்ளியைப் பற்றி எழுத்தாளர், பிரபல பதிவர்களும் பதிவிட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே பாராட்டத் தகுதிப் படைத்த ஆசிரியர்கள்தான். அதுவும் ஃபிராங்க்ளின் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது... பகிர்ந்தமைக்கு நன்றி, வாழ்த்துகள் சகோதரி..!

    ReplyDelete