வெற்றிகள் என்றும் உண்டு.

Posted by G J Thamilselvi On Friday, 7 June 2013 3 comments
தேடல் உண்டு வாழ்விலே
தேடி தெரிய அதிகம் உண்டு
தேடல் தரும் அனுபவததில்
வாழ்க்கைக்கென்று பாடம் உண்டு


பாடங்களை தந்து செல்வோம்
படித்து பழக  கூட்டம் உண்டு
பட்டினத்தார் கரும்பு போல
இனிக்கும் நிகழ்வு உனக்கு உண்டு

வண்ணங்களை அழித்து எழுத
கடவுள் கற்றாரா...?
அவர் சூரியனை கையிலேந்தி
வேறு திசையில் வைப்பாரா...?

நிழல் உரு பல தொடுத்து
நிஜங்களை அதில் மறைத்து - அவன்
ஆடும் ஆட்டம் அறிந்துகொண்டால்
துன்பம் என்றுமில்லை

துயர் தரும் உணர்வுக்குள்ளே
துயிலுறும் இன்பமுண்டு
துணியும் உன் துணிச்சலிலே
வெற்றிகள் என்றும் உண்டு.

3 comments:

 1. துயர் தரும் உணர்வுக்குள்ளே
  துயிலுறும் இன்பமுண்டு

  அருமை

  ReplyDelete
 2. முடிவில் நான்கு வரிகளும் அற்புதம்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வெற்றி பற்றிய உங்கள் வார்த்தைகள் சொல்கிறது உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தன்னம்பிக்கையை... வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete