உன்னில் என்னை தேடுகிறேன்

Posted by G J Thamilselvi On Thursday, 6 June 2013 4 comments
மம்மம்மா என்ன இது
ஒரு புது உணர்வு ஆனது
நெஞ்சுக்குள்ளே  மயிலிறகால்
மத்தாப்புகள் சீண்டுது


பஞ்சு மெத்தை என பிஞ்சு கரங்கள்
அழைத்து செல்வது ஏனடி
நெஞ்சம் முழுவதும் உந்தன் முகம்
வந்து அணைத்துக்கொண்டது பாரடி

கன்னங்களில் கன்னம் பதித்து
கதை சொல்கின்றாய்
கண்கள் வழி எனை அழைத்து
விதி செய்கின்றாய்

உள்ளுணர்வாய் என்னில் புதைந்து
மலர் ஆகிறாய்
எச்சில் மழை முத்தம் பதித்து
குளிர் ஆகிராய்

தத்தி தத்தி மண்ணில் நடந்து
நடனங்கள் புரிகிறாய்
தங்க சிலை நீ என
தவ முகம் தருகிறாய்

மருண்ட விழிகள் சுழன்று எனை
தேடுவது ஏனடி
மலர்ந்த இதழ்கள் குமிழ்ந்து உடன்
விழி கரைவது என் சீரடி

கண் வளரு கண்மணியே
நெஞ்சுரு பாடுகிறேன்
கண்களடி நீ எனக்கு
உன்னில் என்னை தேடுகிறேன்

4 comments:

  1. அழகு... அருமை... இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ரொம்ப இனிமையான கவிதை வாழ்த்துக்கள்.தொடரும் நினைவுகள் துரத்துகின்றது.

    ReplyDelete
  3. அழகான தாலாட்டு கவிதை

    ReplyDelete