வானப்புனல்

Posted by G J Thamilselvi On Monday, 24 June 2013 4 comments
வான் அழுக மறந்ததோ?
வான் புனல் வற்றியதோ?
புவி ஓடு வெடித்திங்கு
நில நீரும் குன்றியதோ?


மேகமது நீர் ஏந்த
முற்றிலுமாய் மறுத்ததோ?
மலைமுகடை முத்தமிட
நாணி தலை கவிழ்ந்ததோ?

வான் மகள் மலடியோ?
கரு அற்று நிற்பவளோ?
அழுது நீர் வற்றிவிட
வெற்று விழி கொண்டவளோ?

காராளன் விழி அது
விண்ணையே நோக்கி நிற்க
சீராட்ட வந்திறங்க மனமில்லா
வஞ்சகியோ...?

4 comments:

 1. நன்றாக கேள்விகளை கேட்டீர்கள்... வஞ்சகம் செய்தது நாம் தான்...!

  ReplyDelete
 2. தள வடிவமைப்பு அருமை... தமிழ்மணம் இணைக்க முடியவில்லை... கவனிக்கவும்...

  ReplyDelete
 3. அற்புதம்..! அதற்கேற்ற படமும் மேலும் மகுடத்தில் வைரப் பதித்தாற் போல அருமை.. விவசாயிகளின் கூக்குரலாய் அமைந்துள்ளது வரிகள்...!!

  கவிதை வரிகள் வாசிக்க மட்டுமல்ல.. !
  சுவாசிக்கவும்தான்.. !!

  மழையில்லா வெயில்காலத்தையும்..
  வறட்சியால் வெடித்த நிலைத்தையும்..
  அதனால் மனம் நொந்து
  வந்து விழும் வார்த்தைகளாய் உங்கள் கவிதை.. !!!

  பகிர்வுக்கு மிக்க நன்றி...!

  ReplyDelete
 4. மனிதன் செய்த செயல்களின் விளைவு

  ReplyDelete