அருத்தியனே...!

Posted by G J Thamilselvi On Friday, 28 June 2013 4 comments
அருத்தியனே…! அருத்தியனே…!
என்னை அணைத்திட அணித்தாய் வா
அலகிலா அன்பைினை
என் இதயத்தில் ஊற்றிட வா


அமலனாய் நீ எனக்கு
அங்கையில் ஏந்த வா
அலறும் நெஞ்ச அடவிக்குள்ளே
அதராய் என்னை தாங்கவா

உன்னை கண்கள் காணும் நாளில்
அகனமர்ந்து போகிறேன்
ஆர்கவியாய் முழங்கும் நெஞ்சம்
அமைதியுற காண்கிறேன்

ஆகம் அது மெலிந்து போக
காதல் நோய் கொள்கிறேன்
நிலவு தரும் அல்லல் தீர
உந்தன் முகம் நாடினேன்

ஆகுலம் கொள்ளும் உள்ளம்
ஆயுள் வரை நீளுதே
ஆதவன் வெம்மை போல
தேகம் எங்கும் காயுதே

இந்து அவள் அமுதம் பொழிந்தும்
தண்மைக்கொள்ள மறுக்குதே
இல்லிடம் உந்தன் இதயம் என்று
தஞ்சம் புக தவிக்குதே

அருத்தியனே…! அருத்தியனே…!
காதல் இசைத்திட இதயத்தில் வா
இனியவனே…! என் இமயவனே…!
பூவிதழ்  நோகா முத்திரை தொடுத்திட வா

4 comments:

 1. கவிதை அருமை. அருத்தியனே என்பதன் பொருள் என்ன?

  ReplyDelete
  Replies
  1. அருத்தியனே - அன்பானவனே என்பது தான் பொருள்

   Delete
 2. நானும் அருத்தியனே என்ற வார்த்தைக்கு பொருள் கேட்கலாம் என்று நினைத்தேன்.. அதற்குள் கோவை ஆவியார் கேட்டுவிட்டார்.. நிறைய தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.. தங்களது கவிதைக்கு அப்பொழுதுதான் முழுமையான பொருளையும் அறிந்துகொள்ள முடியும்.. அருத்தியனே என்பதற்கு 'அன்பானவனே' என்ற பொருள் என்பது இத்தனை நாள் எனக்குத் தெரியாமல் போய்விட்டதே..!!

  கவிதை நன்று... வாழ்த்துகள்.. பாராட்டுகள்..!!!

  ReplyDelete