விடியலை கொஞ்சம் நிறுத்தி வை...!

Posted by G J Thamilselvi On Wednesday, 12 June 2013 3 comments
எண்ணத்தில் என்ன இது மாற்றமோ
என்னுயிரே என்னுள் தொலைகிறாய்
கண்டெடுத்தேன் உன்னை இதயத்தில்
காதல் மனம் துறந்து மறைகிறாய்


தேடி திரியும் பெண்ணை துறந்து
கானல் நீராய் உயிர்க்கிறாய்
காதல் என்ற வார்த்தை வரைந்து
உணர்வை மட்டும் புதைக்கிறாய்

வெண்ணிலவே உந்தன் திரையை விலக்கி
என்னவன் முகம் காண உதவி நி்ல்
மேகத்திரை அதை தூளி ஆக்கி
மஞ்சமிட கொஞ்சம் தூது செல்

காதல் என்ற அரும்பு மலர
தேகம் எங்கும் உணர்வு மணக்க
விழியினில் அவன் தேங்கவே
அந்த விடியலை கொஞ்சம் நிறுத்தி வை

3 comments:

 1. /// கானல் நீராய் உயிர்க்கிறாய் /// வரியுடன் ரசனையுடன் முடித்ததும் அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. 'வெண்ணிலவே உந்தன் திரையை விலக்கி
  என்னவன் முகம் காண உதவி நி்ல்'
  முகம் காண வெண்ணிலவை அழைத்திருக்கும் விதம் அருமை

  ReplyDelete
 3. ஆம் அந்த விடியலை
  கொஞ்சம்
  நிறுத்தத்தான் வேண்டும்
  விழியினில் அவன் தேங்க மட்டுமல்ல
  இதுபோன்ற அற்புதமான கவிதைகளுக்காகவும்
  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete