பொய் முகங்கள்

Posted by G J Thamilselvi On Sunday, 2 June 2013 1 comments
இங்கே பொய் முகங்கள்
புதைக்கப்பட்டு
இராபொழுது இருளில்
இலக்குகள் தேடி அலைகிறது


நேர் முகம் பார்க்கும்போது
உதடுகளின் இளிப்புகளை
சிரிப்புகள் என்று
அமைதிக்குள் போகிறது

எவனோ பசியில் செத்தான்...
அச்சோ பாவம்
எவனோ விபத்தில் செத்தான்
பாவம் நல்ல மனுஷன்

பரிதவி்க்கிற மனதின் பாசாங்கு
பாதிக்கப்பட்டவனின்
பிணிபோக்குமா என்ன..?

விடைதெரியா கேள்விகளில்...
சமுதாய மாற்றம்
லகான குதிரையாக
தாருமாறாக சதிர் ஆடுகிறது
எத்திசையிலும் இங்கே.

1 comment: